உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் ஹைப்பர்லூப்..? மும்பை-புனே வெறும் 20 நிமிடத்தில் பயணம்.
இந்தியாவில் விரைவில் விர்ஜின் ஹைப்பர்லூப் தொழிற்நுட்பம் வர உள்ளது. இதன் மூலம் பயண தூரம் விரைவாக குறையும். இந்தியாவில் இரண்டு வழித்தடங்களில் இந்த ஹைப்பர்லூப் வர உள்ளது.
மும்பையில் இருந்து புனே வரை ஒரு வழித்தடமும், பெங்களூர் நகரத்தில் இருந்து சர்வதேச விமானநிலையம் வரை ஒரு வழித்தடமும் அமைய உள்ளது. மும்பை-புனே வரையிலான 150 கிலோமீட்டர் தூரத்தை 20 நிமிடங்களில் சென்றடையலாம்.
மகாராஷ்ட்ரா அரசு இந்த ஹைப்பர்லூப் தொழிற்நுட்பத்திற்கு அனுமதி அளித்ததை அடுத்து 2018 ஆம் ஆண்டு மும்பை-புனே இடையே ஹைப்பர்லூப் திட்டத்தை அதன் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் அறிவித்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு இதற்கான வேலைகள் நடைபெற இருந்த நிலையில் கொரோனா தொற்றால் திட்டம் நிறுத்தப்பட்டது.
தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் ஹைப்பர்லூப் தொழிற்நுட்பத்திற்கான வேலை தொடங்கப்பட்டுள்ளது. ஹைப்பர்லூப் என்பது ஒரு சீல் செய்யப்பட்ட மற்றும் குறைந்த காற்று அழுத்தம் கொண்ட ஒரு வழித்தடத்தில் அல்லது குழாயில் செல்வதாகும். இதன் மூலம் காற்று எதிர்ப்பு மற்றும் உராய்வு இல்லாமல் விரைவாக பயணிக்கலாம்.
Also Read: சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் கைது..
இந்தியாவில் 2025 ஆம் ஆண்டிற்குள் இதனை பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தொழிற்நுட்பம் முதன்முறையாக இந்தியா அல்லது சவுதி அரேபியாவில் இயக்கப்படும் என ஹைப்பர்லூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவை விட இந்தியாவில் முதலில் வருவதற்கே வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Also Read: சீனாவுக்கு எதிராக இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் முதலீடு செய்யும் இந்திய தனியார் நிறுவனம்..
இந்த ஹைப்பர்லூப் தொழிற்நுட்பம் மூலம் சுற்றுசூழல் மாசுபாடு குறைகிறது. மேலும் ஹைப்பர்லூப் தொழிற்நுட்பத்திற்கு தேவையான பொருட்கள் 70 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் 1.8 மில்லியன் மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது.
Also Read: வானியல் ஆராய்ச்சி மேற்கொள்ள இந்தியாவின் லடாக் ஆய்வகம் சிறந்த இடம்: ஆராய்ச்சியாளர்கள்