இந்திய விமானப்படைக்கு புதிதாக 6 எரிபொருள் நிரப்பும் விமானங்களை வாங்க உள்ள IAF..

இந்திய விமானப்படையிடம் 6 ரஷ்ய IL-78 மிட் ஏர் எரிபொருள் நிரப்பும் விமானங்களை கொண்டுள்ள நிலையில், மேலும் 6 புதிய எரிபொருள் நிரப்பும் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தம் தாமதமாகி வருகிறது.

இதனால் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் ஆறு போயிங்-767 சிவிலியன் விமானங்களை இந்திய விமானப்படைக்கு எரிபொருள் நிரப்பும் விமானமாக மாற்ற இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் உடன் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டது.

ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இந்த 6 போயிங்-767 சிவில் விமானம் இராணுவ விமானமாக மாற்றப்படும். சந்தையில் இருந்து ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட போயிங்-767 விமானங்களை வாங்குவதற்கு உலகளாவிய டெண்டரை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் வெளியிடும்.

இந்த எரிபொருள் நிரப்பும் விமானங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர குறைந்தது 3 முதல் 4 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. உலகளாவிய டெண்டர் தவிர HAL நிறுவனம் ஏர் இந்தியாவின் போயிங்-747 விமானங்களையும் எரிபொருள் நிரம்பும் விமானமாக மாற்றுவதற்கான ஆய்வுகளையும் ஆராய்ந்து வருகிறது.

Also Read: ஹனிட்ராப் மூலம் இந்திய இராணுவ ரகசியங்களை திரட்ட 300 இளம்பெண்களை பணியமர்த்திய பாகிஸ்தான் உளவுத்துறை..

ஏர் இந்தியாவின் இந்த போயிங்-747 விமானங்கள் 20 ஆண்டுகளை நிறைவு செய்ததால் சிவிலியன் பணியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டத்தையும் HAL ஆராய்ந்து வருகிறது. தற்போது இந்திய விமானப்படையிடம் 6 ரஷ்ய IL-78 மிட் ஏர் எரிபொருள் நிரப்பும் விமானங்களை கொண்டுள்ளது. நடுவானில் எரிபொருள் நிரப்புவது போர் விமானங்களின் வரம்பையும் பேலோடையும் கணிசமாக அதிகரிக்கிறது.

Also Read: நமது நிலத்தை கைப்பற்ற நினைத்தால் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: ராஜ்நாத்சிங் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published.