இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்தி கொண்டேன்: ஐநா பொதுச்சபை தலைவர் அப்துல்லா ஷாகித்

இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்தி கொண்டதாக ஐநா பொதுச்சபை தலைவர் அப்துல்லா ஷாகித் தெரிவித்துள்ளார். மேலும் பல உலக நாடுகளுக்கும் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசி கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

கோவிஷீல்டு தடுப்பூசி பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனிகாவால் உருவாக்கப்பட்டு இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. முதல் அலையின் போது இந்தியாவின் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் உலகின் பல நாடுகளுக்கு வழங்கப்பட்டது.

ஏழை நாடுகளுக்கு இலவசமாகவும், நடுத்தர நாடுகளுக்கு சலுகை விலையிலும் மற்ற நாடுகளுக்கு வணிக ரீதியிலும் வழங்கப்பட்டது. இந்தியாவின் அண்டை நாடுகளான பங்களாதேஷ், இலங்கை, நேபாள், பூடான், மியான்மர், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசி ஏற்றுகொள்ள கூடியதா இல்லையா என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டு டோஸை செலுத்தி கொண்டேன் என அப்துல்லா ஷாகித் தெரிவித்துள்ளார். உலகின் பெரும்பாலான பகுதி நாடுகளுக்கு கோவிஷீல்டு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Also Read: இங்கிலாந்துக்கு இந்தியா பதிலடி.. இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் பயணிகள் தனிமைபடுத்துதல் கட்டாயம்..

இந்தியா இதுவரை மானியம், வணிகம் மற்றும் COVAX வசதியின் மூலம் கிட்டதட்ட 100 நாடுகளுக்கு 66 மில்லியனுக்கு அதிகமான கொரோனா தடுப்பூசிகளை அனுப்பியுள்ளது. ஐநா பொதுச்சபை தலைவர் அப்துல்லா ஷாகித்தின் சொந்த நாடான மாலத்தீவுக்கும் இந்தியா கொரோனா தடுப்பூசியை அனுப்பியது.

Also Read: இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியை அங்கிகரித்துள்ளது ஆஸ்திரேலியா..

இந்தியாவிடம் இருந்து தடுப்பூசி பெற்ற முதல் நாடுகளின் பட்டியலில் மாலத்தீவும் ஒன்று. இதுவரை மாலத்தீவுக்கு மானியம், வணிகம் மற்றும் COVAX ரீதியில் 3.12 ல்ன்ட்சம் கொரோனா தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளது.

Also Read: ஏலத்தில் டாடா வெற்றி.. 68 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உரிமையாளரிடமே சென்ற ஏர் இந்தியா நிறுவனம்..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *