இந்தியா 2026 ஆம் ஆண்டே 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் என IMF கணிப்பு..!

உலக நிதி அமைப்பான சர்வதேச நாணய நிதியம் (IMF) அதன் ஏப்ரல் மாத வெளியீட்டை திருத்தி, இந்தியா 2026-27 ஆம் நிதியாண்டில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டும் என கூறியுள்ளது. இதற்கு முன் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தியா 2028-29 ஆம் நிதியாண்டில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டும் என கூறியிருந்தது.

2024-25 ஆம் நிதியாண்டில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறுவதற்கான இலக்கை பிரதமர் மோடி நிர்ணயித்தார். ஆனால் கோவிட் தொற்றால் இந்த இலக்கு 2026 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது சர்வதேச நாணய நிதியமும் 2026 ஆம் ஆண்டு இந்தியா 5 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடையும் என கூறியுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட தற்போதைய தரவுகளின்படி, தற்போது இந்தியாவின் GDP 3.5 டிரில்லியன் டாலராக உள்ளது. இது 2023-24 ல் 3.8 டிரில்லியன் டாலராகவும், 2024-25ல் 4.2 டிரில்லியன் டாலராகவும், 2025-26ல் 4.6 டிரில்லியன் டாலராகவும், 2026-27ல் 5.1 டிரில்லியன் டாலராகவும் இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

இதற்கு முன்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2027-28 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் GDP 4.92 டிரில்லியன் டாலராகவும், 2028-29 ஆம் நிதியாண்டில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் என சர்வதேச நாணய நிதியம் கூறியிருந்தது.

2025-26 நிதியாண்டு அல்லது அடுத்த ஆண்டு 8-7 சதவீதம் நிலையான GDP வளர்ச்சியை அடைவதன் மூலம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைய அரசு நோக்கமாக கொண்டுள்ளது. 2022-23 ஆம் நிதியாண்டில் இந்தியா 8.2 சதவீதம் வளர்ச்சி அடையும் என IMF கணித்துள்ளது.

Also Read: டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி..

2023-24ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.9 சதவீதமாகவும், 2024-25 மற்றும் 2025/26 ஆம் நிதியாண்டில் GDP 7 சதவிதமாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 2026-27 ஆம் ஆண்டில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

Also Read: எகிப்தை தொடர்ந்து இந்தியாவிடம் கோதுமை கேட்கும் மேலும் 12 நாடுகள்..

இந்தியா தற்போது உலகின் 6வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. 2026ல் 5 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடைய விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் இருந்து 1 டிரில்லியன் டாலரும், உற்பத்தி துறையில் இருந்து 1 டிரில்லியன் டாலரும் மற்றும் சேவை துறையில் இருந்து 3 டிரில்லியன் டாலரும் அடைய இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

Also Read: 1லட்சம் கோடி மதிப்பில் 27 துறைமுகங்களை ரயில் பாதையுடன் இணைக்க திட்டம்..!

Leave a Reply

Your email address will not be published.