பெரும்பான்மையை இழந்த இம்ரான்கான்..? பிரதமர் பதவியை ராஜினாமா செய்யகோரி நெருக்கடி..
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கட்சியான தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை சேர்ந்த பல சட்டமன்ற உறுப்பினர்கள் விலகிய நிலையில் இம்ரான்கான் அரசு கவிழ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் பிரதமரின் பதவி காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில் பெருன்பான்மை இல்லாத காரணத்தால் இந்த ஆண்டே ஆட்சி கவிழ அதிகம் வாய்ப்பு இருப்பதாக உள்ளுர் தொலைகாட்சிகள் தெரிவிக்கின்றன. இம்ரான்கானின் கட்சியை சேர்ந்தவர்களே பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கூறி பிரதமர் இம்ரான்கானை பதவி விலக கூறியுள்ளனர். ஆனால் இம்ரான்கான் கடைசி வரை போராடுவேன் என கூறியுள்ளார்.
இம்ரான்கானின் தகவல் அமைச்சர் ஃபவாத் சௌத்ரி கூறுகையில், பிரதமர் ராஜினாமா செய்யப்போவதில்லை, கடைசி வரை நம்பிக்கை வாக்கெடுப்பை தோற்கடிப்பேன் என கூறியுள்ளார். மேலும் எதிர்கட்சி தலைவர்கள் சட்டமியற்றுபவர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
மார்ச் 21 ஆம் தேதி பாராளுமன்ற கீழ்சபை கூட உள்ள நிலையில், மார்ச் 28 ஆம் தேதி இம்ரான்கான் அரசு நீடிக்க வேண்டுமா இல்லையா என்ற வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஆட்சியில் தொடர இம்ரான்கான் மார்ச் 28 ஆம் தேதி பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும்.
Also Read: ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்து டெல்லியில் ரஷ்ய கொடியை ஒளிரவிட்டதாக போலி செய்தி வெளியிட்ட சீனா..
பொருளாதாரம் மற்றும் வெளியுறவு கொள்கையை தவறாக கையாண்டதாக எதிர்கட்சிகள் இம்ரான்கான் அரசை விமர்சித்து வருகின்றன. இம்ரான்கான் ஆட்சியில் அமெரிக்கா உடனான உறவு மிகவும் மோசமடைந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
பாராளுமன்றம் 342 உறுப்பினர்களை கொண்ட நிலையில், இம்ரான்கான் கடந்த ஆண்டு 179 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். பெரும்பான்மைக்கு 175 தேவை என்ற நிலையில் 7 உறுப்பினர்களின் ஆதரவை அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். எதிர்கட்சிகளுக்கு 162 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கின்றன.
Also Read: முஸ்லிம் அல்லாதவர்களும் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும்.. மருத்துவ கல்லூரி உத்தரவால் சர்ச்சை.
இந்த நிலையில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் 24 உறுப்பினர்களுக்கு மேல் விலகிவிட்டதாக செய்திகள் வெளிவருகின்றன. எதிர்கட்சிகளுக்கு இன்னும் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவதால், விலகிய 24 உறுப்பினர்கள் ஆதரவு எதிர்கட்சிகளுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. இதனால் மார்ச் 28 ஆம் தேதிக்கு பிறகு இம்ரான்கான் நீடிப்பது கடினம் என தகவல்கள் வெளிவருகின்றன.