ஜார்கண்டில் 33 அரசு பள்ளிகள் உருது பள்ளிகளாக மாற்றப்பட்டு வெள்ளிக்கிழமை விடுமுறையாக அறிவிப்பு..

ஜார்கண்ட் மாநிலம் தும்காவில் உள்ள 33க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் உருது பள்ளிகளாக மாற்றப்பட்டதாக முன்பு சர்ச்சை வெடித்த நிலையில் தற்போது வார விடுமுறையாக ஞாயிற்றுகிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் சொந்த ஊரான தும்காவில் உள்ள 33 அரசு பள்ளிகள், அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல மாற்றங்களை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த அரசு பள்ளிகள் அனைத்து உருது பள்ளிகளாக மாற்றியுள்ளன.

மேலும் வார விடுமுறை நாட்களான ஞாயிற்றுகிழமைக்கு பதிலா இஸ்லாமியர்களின் விருப்பதிற்கு ஏற்ப வெள்ளிக்கிழமையாக மாற்றப்பட்டுள்ளன. இந்த பிரச்சனை குறித்து பள்ளிக்கல்வி துறை கவனத்தில் எடுத்துள்ளதாக தும்காவின் பள்ளிக்கல்வித்துறை தலைவர் சஞ்சய் குமார் தாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் சஞ்சய் குமார் தாஸ் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட 33 பள்ளிகளுக்கும் நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம். இந்த நிறுவனங்களுடன் எவ்வாறு உருது இணைக்கப்பட்டது மற்றும் எந்த நிபந்தனையின் கீழ் அரசு பள்ளிகளில் ஞாயிற்றுகிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

தகவலின்படி, தும்காவின் ஷிகாரிபாரா பிளாக்கில் உள்ள 10 அரசு பள்ளிகள், ரணிஷ்வர் பிளாக்கில் உள்ள 8 பள்ளிகள், சராயஹாட் பிளாக்கில் உள்ள 7 பள்ளிகள், ஐமா பிளாக் மற்றும் ஜர்முண்டி பிளாக்கில் உள்ள 2 பள்ளிகள், கதிகுண்ட் பிளாக் மற்றும் தும்கா பிளாக் ஆகிய பள்ளிகள் ஞாயிற்றுகிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை வார விடுமுறையாக மாற்றியுள்ளன.

மேலும் இந்த பள்ளிகளின் முகப்பு பலகைகள் உருது மொழியில் மாற்றப்பட்டுள்ளன. சமீபத்தில் ஜம்தாரா மாவட்டத்தில் உள்ள சுமார் 40 பள்ளிகள் இதே பிரச்சனையால் ஜூலை 12 அன்று வெள்ளிக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுகிழமைக்கு திரும்புவதாக எழுத்துபூர்வமாக தெரிவித்து இருந்தது. இந்த சம்பவம் குறித்து ஜார்கண்ட் அரசை பாஜக கடுமையாக சாடியுள்ளது.

பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா கூறுகையில், வாங்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது. இது சட்டத்திற்கு எதிரானது மற்றும் அரசியலமைப்பு கோட்பாடுகளுக்கு எதிரானது என கூறிய பூனவல்லா, ஓட்டு வங்கி அரசியலில் ஈடுபடக்கூடாது என கூறினார். இது தொடர்பாக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலம் கிரிதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவன் கரும்பலகையில் ஜெய் ஶ்ரீராம் என எழுதியதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியர் முகமது அபுல் கலாம் அந்த மாணவனை கடுமையாக தாக்கினார். பின்னர் இந்த பிரச்சனையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.