பாகிஸ்தானில் அதிகரிக்கும் பயங்கரவாதம்.. வளர்ந்து வரும் TTP பயங்கரவாத அமைப்பு..!

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து பாகிஸ்தானில் பயங்கரவாதம் மீண்டும் அதிகரித்துள்ளது. தற்போது பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) பயங்கரவாத அமைப்பு வேகமாக வளர்ந்து வருகிறது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இந்த மாத தொடக்கத்தில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் 8 பாகிஸ்தான் பாதுகாப்பு வீரர்கள் தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பினரால் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பாகிஸ்தானில் மீண்டும் பயங்கரவாதம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த மாத தொடக்கத்தில் லக்கி மார்வாட்டின் குரும் பர் பகுதியில், போலீஸ் வேன் மீது பயங்கரவாதிகள் துப்பாகிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 6 போலிசார் உயிரிழந்தனர். மற்றொரு சம்பவத்தில் பஜார் மாவட்டத்தில் உள்ள சார்மாங் பகுதியில் பாகிஸ்தான்-ஆப்கன் எல்லை அருகே பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு இராணுவ வீரர்கள் மற்றும் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டனர்.

தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் மட்டுமின்றி பலூச் விடுதலை இராணுவம் மற்றும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் மீண்டும் வளர்ச்சி அடைந்து வருகின்றன. இது பாகிஸ்தான் அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் ஒரு அமைச்சரை கடத்தி சென்று அரசை எச்சரித்தனர்.

இதன் மூலம் பாகிஸ்தானில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கி வருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் இராணுவம் அவ்வபோது ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் உடனும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இருதரப்பும் துப்பாக்கிச்சூடு நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.