S-500 ஏவுகணை அமைப்பை முதல் நாடாக வாங்குகிறது இந்தியா..? ரஷ்ய துணை பிரதமர் அறிவிப்பு..
டிசம்பர் 6 அன்று 21வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்து சென்ற சில நாட்களுக்கு பிறகு ரஷ்ய துணை பிரதமர் யூரி போரிசோவ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் S-500 ஏவுகணை அமைப்பை வாங்கும் முதல் நாடு இந்தியாவாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
ரஷ்ய துணை அதிபர் யூரி போரிசோவ் திங்கள் அன்று RBC டிவி நிகழ்ச்சியில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட S-500 ஏவுகணை அமைப்பை வாங்கும் முதல் நாடு இந்தியாவா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த யூரி, இந்த S-500 ஏவுகணை அமைப்பை எங்கள் துருப்புகளுக்கு வழங்கிய பிறகு இந்த ஏவுகணை அமைப்பை வாங்கும் நாடுகளின் தரவரியையில் இந்தியா முதலிடத்தில் இருக்கும்.
இருப்பினும் அதனை வாங்க இந்தியா விருப்பம் தெரிவித்தால் மட்டுமே என யூரி தெரிவித்தார். ரஷ்யா ஏற்கனவே S-400 ஏவுகணை அமைப்பை இந்த ஆண்டுக்குள் முழுமையாக இந்தியாவுக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018 அக்டோபரில் 5.43 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் 5 S-400 ஏவுகணை அமைப்பை வாங்க இந்தியாவும் ரஷ்யாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
மேலும் ரஷ்யாவின் இயக்குனர் ஜெனரல் அலெக்சாண்டர் மிகீவ் கூறுகையில் இந்த S-400 ஏவுகணை அமைப்பை பயன்படுத்துவது தொடர்பான பயிற்சியை முடித்துவிட்டு வீரர்கள் தாயகம் திரும்பிவிட்டதாக தெரிவித்தார். S-400 நீண்ட தூர ஏவுகணை பாதுகாப்பு அமைப்பானது போர் விமானங்கள், கப்பல், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை அழிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த S-400 ஏவுகணை அமைப்பு 400 கிலோமீட்டர் தூரம் மற்றும் 30 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க கூடியது. இருப்பினும் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து இந்த ஏவுகணை அமைப்பை வாங்குவதன் மூலம் அமெரிக்கா CAATSA சட்டத்தின் கீழ் பொருளாதார தடை விதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Also Read: தைவான் அருகே சீன நீர்மூழ்கி கப்பலை தாக்கிய அமெரிக்கா.. தென்சீனக்கடலில் பரபரப்பு..
CAATSA சட்டம் என்பது அமெரிக்க எதிரிகளை பொருளாதார தடைகள் மூலம் எதிர்ப்பது ஆகும். ரஷ்யா உடனான அனைத்து பரிவர்த்தனைகளையும் கைவிடுமாறு எங்களின் அனைத்து நட்பு நாடுகள் மற்றும் எங்கள் கூட்டாளிகளையும் வலியுறுத்தி உள்ளதாக அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறி இருந்தார். இந்தியாவிற்கு விலக்கு அளிப்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என அமெரிக்கா கூறி உள்ளது.
Also Read: ஹப்பர்சோனிக் குருஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த ரஷ்யா..
ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணை அமைப்பை வாங்கியதால் அமெரிக்கா ஏற்கனவே CAATSA சட்டத்தின் மூலம் துருக்கி மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இந்த நிலையில் S-500 ஏவுகணை அமைப்பை வாங்க துருக்கி அதிபர் எர்டோகண் 2019 ஆம் ஆண்டு விருப்பம் தெரிவித்து இருந்தார். அதேபோல் சீனாவும் விருப்பம் தெரிவித்து இருந்தது. ஆனால் சீனா வாங்கினால் இந்தியாவிற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக்கூடாது எனவும் நிபந்தனை விதித்துள்ளது.
Also Read: பிரமோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையின் வான் பதிப்பை வெற்றிகரமாக சோதனை செய்தது DRDO..
பல நாடுகள் S-500 ஏவுகணை அமைப்பை வாங்க விருப்பம் தெரிவித்தாலும் ரஷ்யா இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பது யூரி மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும் S-500 அமைப்பை வாங்குவது தொடர்பாக இந்திய தரப்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்தியா ஏற்கனவே ரஷ்யாவுடன் பிரமோஸ் ஏவுகணை, Su-30 போர் விமானங்களின் உரிமம் பெற்ற தயாரிப்பு, T30 டாங்கிகளை தயாரித்து வருகிறது. தற்போது AK 203 துப்பாக்கிகளை தயாரிக்க உள்ளது.