இந்தியா ரஷ்யாவுடன் இணைந்து ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கி வருகிறது: அமெரிக்கா அறிக்கை

ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை உருவாக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது என அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியா மட்டும் அல்லாமல் மேலும் சில நாடுகள் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா அணு ஆயுதம் தாங்கிய ஹப்பர்சோனிக் ஏவுகணையை சோதித்தது தொடர்பாக அமெரிக்காவின் சுதந்திரமான காங்கிரஸ் ஆராய்ச்சி சேவை(CRS) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஹைப்பர்சோனிக் ஏவுகணை இலக்கை அடையும் முன் உலகை சுற்றிவந்து அதன் திறனை நிருப்பித்து இருப்பது அமெரிக்க உளவுத்துறையை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த ஏவுகணையின் தூரம் 1000 முதல் 1500 மைல்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஹைப்பர்சோனிக் தொழிற்நுட்பத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மட்டுமில்லாமல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகளும் ஹப்பர்சோனிக் தொழிற்நுட்பத்தை சோதித்து வருகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா பிரமோஸ் II என்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ரஷ்யாவுடன் இணைந்து உருவாக்கி வருவதாக CRS அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரமோஸ் II ஏவுகணை மேக் 7 வேகத்தில் செல்லக்கூடிய கப்பல் ஏவுகணை ஆகும். இந்த திட்டம் 2017 ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த திட்டத்தில் சில தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை 2025-28 ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுத்தவிர இந்தியா ஹைப்பர்சோனிக் திட்டத்தின் கீழ் உள்நாட்டில் இரட்டை திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையை உருவாக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டில் ஸ்க்ராம்ஜெட்டை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Also Read: பாதுகாப்பு தடவாளங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதன்முறையாக இணைந்த இந்தியா..

இந்தியா கிட்டதட்ட 12 ஹைப்பர்சோனிக் காற்றாலை சுரங்கங்களை இயக்குகிறது. இது மேக் 13 வரை சோதிக்கும் திறன் கொண்டது என CRS அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அமெரிக்கா ஆஸ்திரேலியா இணைந்து ஹப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்கி வருகின்றன. இதுத்தவிர அமெரிக்கா தனியாகவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயாரித்து வருகிறது.

ஆஸ்திரேலியா 7 காற்றாலை சுரங்கங்களை இயக்குகிறது. இதில் மேக் 30 வரை வேகத்தை சோதனை செய்யும் திறன் கொண்டது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரான்சும் இந்தியாவை போலவே ரஷ்யாவுடன் இணைந்து ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கி வருகிறது.

Also Read: ஏழு புதிய பாதுகாப்பு நிறுவனங்களை நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி.. பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு..

அதேபோல் ஜப்பானும் ஹப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கி வருகிறது. மேலும் ஹைப்பர் வெலோசிட்டி கிளைடிங் எரிப்பொருளையும் உருவாக்கி வருவதாக CRS அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹப்பர்சோனிக் தொழிற்நுட்பத்தில் அமெரிக்காவிற்கு சீனா சவாலாக இருக்கும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Also Read: இந்திய கடற்படைக்கு புதிதாக இரண்டு வகையான நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க திட்டம்..

Leave a Reply

Your email address will not be published.