கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு 18 லட்சம் டன் ஏற்றுமதி செய்த இந்தியா..?

மே 13 ஆம் தேதி தானிய ஏற்றுமதிக்கு தடை விதித்ததில் இருந்து பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற 18 நாடுகளுக்கு இந்தியா 18 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளதாக உணவு செயலாளர் சுதான்ஷு பாண்டை தெரிவித்துள்ளார்.

ஜூன் 24 ஆம் தேதி ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற உலகளாவிய உணவு பாதுகாப்புக்காக ஒன்றிணைதல் குறித்த அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய பாண்டே, 1.38 பில்லியன் மக்களுக்கு உணவளிக்கும் கடுமையான கடமைகளை பூர்த்தி செய்யும் அதே நேரத்தில், உலகின் தேவைகளை இந்தியா எப்போதும் கருத்தில் கொண்டுள்ளது என கூறியுள்ளார்.

இந்த நிதியாண்டில் ஜூன் 22 வரையில், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இஸ்ரேல், இந்தோனேசியா, மலேசியா, நேபாளம், ஓமன், பிலிப்பைன்ஸ், கத்தார், தென் கொரியா, இலங்கை, சூடான், சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வியட்நாம் மற்றும் ஏமன் போன்ற நாடுகளுக்கு 18 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

மேலும் உள்நாட்டு சந்தையில் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 13 அன்று கோதுனை ஏற்றுமதிக்கு அரசாங்கம் தடை விதித்தது. பொதுவாக 2 மில்லியன் டன் கோதுனை ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், 2021-22 ஆம் நிதியாண்டில் இந்தியா 7 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது.

தொற்றுநோய்களின் போதும் அதன் பிறகும் இந்தியா தடுப்பூசிகள் மற்றும் உணவு பொருட்களை மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். உதாரணமாக ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் 33,000 டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று நோய்களின் போது, ஆப்கானிஸ்தான், கொமொரோஸ், ஜிபூட்டி, எரித்திரியா, லெபனான், மடகாஸ்கர், மலாவி, மாலத்தீவு, மியான்மர், சியரா லியோன், சூடான், தெற்கு சூடான், சிரியா, ஜாம்பியா, ஜிம்பாப்வே போன்ற நாடுகளுக்கு கோதுமை, அரிசி, பருப்பு வகைகள் மற்றும் உணவு உதவிகளை இந்தியா வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.