இந்தியா ஏற்றுமதியில் இந்த ஆண்டு வரலாறு காணாத உச்சத்தை எட்டும்: வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல்

டெல்லியின் பிரகதி மைதானத்தில் 40வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியை துவக்கி வைத்து உரையாற்றிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஸ் கோயல் கொரோனா தாக்கம் குறைந்து இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் செல்வதாக கூறினார்.

இந்த ஆண்டு ஏற்றுமதியில் இந்தியா வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மேலும் மோடி பதவி ஏற்றதில் இருந்து கடந்த ஏழு ஆண்டுகளாக அந்நிய நேரடி முதலீட்டில் இந்தியா நிலையான வளர்ச்சியை பெற்றுவருகிறது என பியூஸ் கோயல் கூறினார்.

இந்தியாவின் ஏற்றுமதி, பொருளாதாரம், பன்முகத்தன்மை, உட்கட்டமைப்பு மற்றும் தேவை ஆகிய ஐந்து சூத்திரங்களை இந்த கண்காட்சி பிரதிபலிப்பதாக கோயல் கூறினார். மேலும் இந்த ஆண்டு ஏற்றுமதியில் புதிய வரலாறு படைக்க போவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேக் இன் இந்தியா மற்றும் மேக் ஃபார் தி வோர்ல்ட் என்பது வெறும் வார்த்தை மட்டும் அல்ல, அது உறுதி, எண்ணங்கள் மற்றும் நம் மீது உள்ள நம்பிக்கையை குறிக்கிறது என கோயல் தெரிவித்தார்.

உலக பொருளாதார மன்றத்தின் தலைவர் போர்ஜ் பிரண்டே, கொரோனா பெருற்தொற்றின் போது அதனை சமாளிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு குறித்து பிரதமர் மோடி உடன் ஆலோசனை நடத்தியதாக பிரண்டே கூறினார்.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவானதை அடுத்து வாழ்த்து தெரிவித்த பிரண்டே, உலகில் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று என தெரிவித்தார். மேலும் ஜி20 தலைவர் பதவிக்கு போட்டியிடும் இந்தியா, அடுத்த ஆண்டு இரட்டை இலக்கு வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். அதே போல் பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடிஸ் இந்தியாவின் வளர்ச்சி நிலையானது என கூறி இருந்தது. IMF மற்றும் உலக வங்கியும் இந்தியாவின் வளர்ச்சியை உயர்த்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.