இந்தியா சுதந்திரமாக உள்ளது. ஆனால் நாங்கள் இன்னும் அடிமைகளாகவே இருக்கிறோம்: இம்ரான்கான்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு தொடர்பாக பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் அரசை கடுமையாக விமர்சித்த இம்ரான்கான், இந்தியாவை மீண்டும் பாராட்டியுள்ளார்.

நேற்று ஷேகாபாத்தின் சாரசடாவில் நடைபெற்ற தொழிலாளர் மாநாட்டில் உரையாற்றிய முன்னாள் பிரதமர் இம்ரான்கான், கடந்த வாரம் ஒரே நாளில் பெட்ரோல் 30 ரூபாயும், டீசல் 20 ரூபாயும் உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். அமெரிக்க அடிமைகள் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளனர்.

அதே நேரத்தில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து மலிவான விலையில் எண்ணெய் வாங்கி எரிபொருள் விலையை குறைத்துள்ளதாக கூறியுள்ளார். இந்தியா சுதந்திரமானது, ஆனால் நாங்கள் பாகிஸ்தானியர்கள் அடிமைகள் என்பதை இது காட்டுகிறது என தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான் கூறினார்.

அமெரிக்காவின் தடைகளை மீறி ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக கூறி, சுதந்திரமான வெளியுறவு கொள்கையை இந்தியா பின்பற்றுவதாக பாராட்டியுள்ளார். தனது அரசாங்கம் ரஷ்யாவுடன் 30 சதவீத சலுகை விலையில் எண்ணெய் வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், ஆனால் சதித்திட்டத்தின் கீழ் தனது அரசாங்கம் அகற்றப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தானின் விரைவான முன்னேற்றத்திற்கு சுதந்திரமான வெளியுறவு கொள்கை அவசியம் என கூறிய கான், தனது கட்சியின் அமைதியான போராட்டக்காரர்களை சித்திரவதை செய்ததற்காகவும், அவர்களது வீடுகளில் சோதனை நடத்தியதற்காகவும் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா மற்றும் பஞ்சாப் முதல்வர் ஹம்சா ஷெஹ்பாஸ் ஆகியோரை நாடு மன்னிக்காது என எச்சரித்துள்ளார்.

Also Read: ஜின்ஜியாங்கில் மனித உரிமை மீறல்.. சீனாவை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள்..

மேலும் அனைவரும் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு விரைவில் கம்பிகளுக்கு பின்னால் அனுப்பப்படுவார்கள் என கான் கூறினார். மற்றொரு நீண்ட அணிவகுப்புக்கு இளைஞர்களை தயார் படுத்துமாறு கேட்டுக்கொண்ட கான், இறக்குமதி செய்யப்பட்ட அரசாங்கத்தை வீழ்த்த தனது கட்சி விரைவில் இஸ்லாமாபாத்தை நோக்கி அணிவகுத்து செல்லும். அமைதியான வழிகளில் உரிமைகள் மறுக்கப்பட்டால் தமது கட்சிகாரர்கள் அவர்களின் உரிமைகளை பறிப்பார்கள் என எச்சரித்துள்ளார்.

Also Read: எண்ணெய் மற்றும் உணவு நெருக்கடி.. ரஷ்யா மீதான தடையை நீக்கும் ஐரோப்பிய யூனியன்..?

இம்ரான் கான் இந்தியாவை பாராட்டுவது இது முதன்முறையல்ல கடந்த காலங்களில் பலமுறை இந்தியாவை கான் பாராட்டியுள்ளார். இதனால் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவர் நவாஸ் இம்ரான்கானை விமர்சித்து இருந்தார். நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், இம்ரான்கானை இந்தியா செல்லுமாறு விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஈரான் எண்ணெய் கப்பலை சிறைபிடித்த கிரீஸ்.. பதிலுக்கு 2 கிரீஸ் கப்பலை கைப்பற்றிய ஈரான்..

Leave a Reply

Your email address will not be published.