இந்தியா எங்களின் மிக முக்கியமான நண்பன்.. சர்வதேச பிரச்சனைகளில் இந்தியாவை ஆதரிக்கிறோம்: பெலாரஸ்

பெலாரஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் விளாடிமிர் மேகி கூறுகையில், இந்த பிராந்தியத்தில் பெலாரஸின் மிக முக்கியமான கூட்டாளியாக இந்தியாவை கருதுவதாகவும், மேலும் இந்தியா உடனான உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல இருப்பதாகவும் மேகி கூறியுள்ளார்.

மேலும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டின் போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனான சந்திப்பு குறித்தும் மேகி கூறினார். இந்தியா உடனான உறவை விரிவாக்க டெல்லியை அடுத்து மும்பையில் ஒரு துணை தூதரகத்தை அமைக்க உள்ளதாக மேகி கூறினார்.

இந்தியாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்க விரும்புகிறோம். மேலும் சர்வதேச பிரச்சனைகளில் இந்தியாவின் நிலைபாட்டை நாங்கள் அறிவோம். நாங்கள் இந்தியாவிற்கு ஆதரவு அளிக்கிறோம். ஏனென்றால் எங்களின் நிலைபாடும் இந்தியாவின் நிலைபாடும் ஒத்துபோகிறது என மேகி கூறினார்.

Also Read: பின்னடைவில் சீனாவின் ஒன் பெல்ட் ஒன் ரோடு திட்டம்.. சீனா உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து வரும் ஆப்ரிக்க நாடுகள்..

இந்தியாவும் பெலாரசும் இணைந்து பல்வேறு நாடுகளுக்கிடையேயான தொடர்பை அதிகரிக்க வேண்டும். இந்தியா உடனான மூலோபாய கூட்டாண்மை மற்றும் இராஜதந்திர உறவுகளை அதிகரிக்க விரும்புவதாக மேகி கூறினார்.

Also Read: சர்வதேச அணுசக்தி அமைப்பு தேர்தல்.. ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா வெற்றி..

எதிர்காலத்தில் இந்தியா உடனான வர்த்தகம் புதிய உச்சத்தை எட்டும் எனவும், பெலாரஸ் மற்றும் இந்தியா அனைத்து துறைகளிலும் இணைந்து செயல்பட இருப்பதாகவும் மேகி தெரிவித்தார். சோவியத் யூனியனின் பிளவை தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு ரஷ்யாவிடம் இருந்து விடுதலை பெற்றது பெலாரஸ். மேலும் 1986 ஆம் ஆண்டு உக்ரைனில் நடந்த செர்னோபில் அணுஉலை விபத்தினால் பாதிக்கப்பட்ட நாடு. தற்போது இந்தியாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தி வருகிறது.

Also Read: அணுசக்தி திறன் கொண்ட அக்னி-5 ஏவுகணையை சோதனை செய்ய உள்ள DRDO.. ஆவேசமடைந்த சீனா, பாகிஸ்தான்..

Leave a Reply

Your email address will not be published.