பாதுகாப்பு தடவாளங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதன்முறையாக இணைந்த இந்தியா..

பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்யும் முதல் 25 நாடுகளின் பட்டியலில் முதன்முறையாக இந்தியா இணைந்துள்ளது. இது குறிப்பிடத்தக்க வளர்ச்சி என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் 2020 அறிக்கையின் படி, வெளிநாடுகளுக்கு பாதுகாப்பு தடவாளங்களை ஏற்றுமதி செய்யும் முதல் 25 நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. இதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்ளவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு அடையவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் 2015ல் இரண்டாவது நேர்மறை பூர்வீக பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 108 பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கவும், அவற்றை இந்தியாவிலேயே தயாரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை, தேஜஸ் போர் விமானம் போன்றவற்றையும் மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தேஜஸ் விமானம் ஏற்றுமதி செய்ய தயாராக உள்ளது. விஜய தசமி அன்று பிரதமர் மோடி 200 ஆண்டுகள் பழமையான ப நிறுவனங்களை 7 நிறுவனங்களாக இணைத்து நாட்டிற்கு அர்பணித்தார்.

Also Read: பாகிஸ்தான் கடற்பரப்பில் நுழைந்த இந்திய நீர்மூழ்கிகப்பல்.. பாகிஸ்தான் எதிர்ப்பு.

மேலும் கூறிய பிரதமர், கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பு தடவாள ஏற்றுமதி 325 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறினார். புதிய நிறுவனங்கள் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் இந்தியாவின் பாதுகாப்பு தடவாளங்களை பூர்த்தி செய்யும் என கூறினார்.

Also Read: இந்தியா வரும் நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் விமானம்.. சீனாவுக்கு எதிராக களமிறக்க திட்டம்..

2024-25 ஆம் ஆண்டுக்குள் 35,000 கோடி அளவுக்கு விள்வெளி மற்றும் பாதுகாப்பு தடவாள ஏற்றுமதியை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவை உலகளாவிய பாதுகாப்பு விநியோக சங்கிலியின் பகுதியாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Also Read: இந்தியா அமெரிக்கா இடையே போர் பயிற்சி.. போர் பயிற்சியில் மெட்ராஸ் படை வீரர்கள்.. இலங்கையுடன் நிறைவு..

Leave a Reply

Your email address will not be published.