இலங்கைக்கு உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா கடன்.. சென்னையில் தயாரிக்கப்பட்ட இரயில் பெட்டிகள் இலங்கை சென்றது.

இலங்கைக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சென்னை ICF தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 20 பயணிகள் ரயில் பெட்டிகளை இந்திய ரயில்வே இலங்கை ரயில்வேக்கு வழங்கி உள்ளது. இலங்கையின் உள்கட்டமைப்பின் வளர்ச்சிக்காக இந்திய அரசு வழங்கியுள்ளது.

இலங்கைக்கு 316 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் மதிப்பில் 160 பயணிகள் இரயில் பெட்டிகளை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் செப்டம்பர் 17 ஆம் தேதி 20 இரயில் பெட்டிகள் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்தன. ஏற்கனவே இலங்கைக்கு 60 ரயில் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் 20 ரயில் பெட்டிகள் இலங்கைக்கு அனுப்புவதற்கு தயாராக இருப்பதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்தியா ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளுக்கும் இரயில் பெட்டியை தயாரித்து வணிக ரீதியில் அனுப்பியுள்ளது. அதேபோல் இலங்கைக்கும் 316 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ரயில் பெட்டிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஏசி பெட்டிகளும் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. மொத்தமாக இலங்கைக்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள 3.5 பில்லியன் டாலர் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் மாஹோவில் இருந்து ஓமந்தை வரை 120 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரயில் பாதையை மேம்படுத்துதல், மாஹோவில் இருந்து அனுராதபுரம் மற்றும் கஹாவேலாவிலிருந்து குருநாகல் வரை இரட்டை ரயில் பாதை திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Also Read: குஜராத் அருகே பிடிபட்ட 3,000 கிலோ போதைப்பொருள்..? தாலிபான்களுக்கு தொடர்பு..

மேலும் 350 கிலோ மீட்டருக்கு சிக்னல் மற்றும் தொலைதொடர்பு நிறுவுதல், 270 கிலோ மீட்டருக்கு இரயில் பாதை புனரமைப்பு, 120 கிலோ மீட்டருக்கு கடலோர ரயில் பாதை திட்டம் ஆகியவை முடிக்கப்பட்டு உள்ளன. மேலும் பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த தகவலை கொழுப்பில் உள்ள இந்திய உயர் ஆணையம் தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறையில் இருக்கும் இலங்கைக்கு வளர்ச்சி பணிகள் அடிப்படையில் இலங்கை இரயில்வேக்கு இந்த கடன் வழங்கப்பட்டுள்ளது.

Also Read: சீனாவை விட்டு வெளியேறும் பெரும் நிறுவனங்கள்.. இந்தியாவில் கால்பதிக்கும் ஆப்பிள்..

Leave a Reply

Your email address will not be published.