100 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா வரலாற்று சாதனை.. பிரதமர் மோடி, WHO பாராட்டு..

இந்தியா 100 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளது. இதனை பிரதமர் மோடி தனது ட்வீட்டில் தெரிவித்து அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு சென்று அங்கு உள்ள மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் உரையாடினார். 100 கோடி டோஸ் தடுப்பூசியை எட்டியவுடன், இது ஒரு வரலாற்று சாதனை என ட்விட்டரில் தெரிவித்தார்.

130 கோடி இந்தியர்களின் வெற்றியை நாம் காண்கிறோம். 100 கோடி டோஸ் தடுப்பூசியை கடந்த நம் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள். எங்கள் அறிவியல் நிறுவனங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

நிதி ஆயோக் தலைவர் வி.கே.பால் கூறுகையில், இந்தியாவில் தடுப்னூசி திட்டம் தொடங்கப்பட்ட ஒன்பது மாதங்களுக்குள் நாம் இந்த இலக்கை எட்டியுள்ளோம். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பால் தெரிவித்தார். சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில்,
மோடியின் திறமையான ஆட்சியின் கீழ் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பும் இந்தியாவின் சாதனையை பாராட்டியுள்ளது. தென்கிழக்கு ஆசியாவின் இயக்குனர் பூனம் கெத்ரபால் சிங் கூறுகையில், குறுகிய காலத்தில் அசாதாரண சாதனையை வலுவான தலைமையின் கீழ் நிகழ்த்தப்பட்டுள்ளது. முழு அர்பணிப்பு முயற்சிகள் இல்லாமல் இது சாத்தியமில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவில் 75 சதவீதம் பேருக்கு முதல் டோஸும் மற்றும் 31 சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 16 அன்று தொடங்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் பணியில் முதல் 85 நாட்களில் 10 கோடி டோஸ்களும், அடுத்த 45 நாட்களில் 20 கோடி டோஸ், அடுத்த 29 நாட்களில் 30 கோடி டோஸ், அடுத்த 30 நாட்களில் 40 கோடி டோஸூம், ஆகஸ்ட் 6 ஆம் தேதியுடம் 50 கோடி டோஸூம் செலுத்தப்பட்டது.

Also Read: புதிய கட்சியை துவக்க உள்ளதாக அமரிந்தர் சிங் அறிவிப்பு.. 2022ல் பாஜகவுடன் கூட்டணி..?

தற்போது 100 கோடி டோஸ் செலுத்தப்பட்டு வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதிக தடுப்பூசி செலுத்திய மாநிலங்களின் பட்டியலில் உத்திரபிரதேசம், மகாராஷ்ட்ரா, மேற்குவங்கம், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. ஜனவரி 16 அன்று துவங்கப்பட்ட தடுப்பூசி இயக்கம் முதல்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது.

Also Read: சீனாவுக்கு எதிராக சோலார் பேட்டரி சந்தையில் களமிறங்க உள்ள ரிலையன்ஸ் நிறுவனம்..

பின்னர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டது. மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்கப்பட்டது. 100 கோடி இலக்கை அடைந்ததை பெரும் விழாவாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Also Read: பாகிஸ்தான் கடற்பரப்பில் நுழைந்த இந்திய நீர்மூழ்கிகப்பல்.. பாகிஸ்தான் எதிர்ப்பு.

Leave a Reply

Your email address will not be published.