சீனாவுக்கு எதிராக பிலிபைன்ஸ்க்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கும் இந்தியா..

இந்தியா தனது பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை பிலிப்பைன்ஸுக்கு வழங்க உள்ளது. 2025 ஆம் ஆண்டில் ஆயுத ஏற்றுமதியில் 5 பில்லியன் டாலர் இலக்கை அடைய இந்த சூப்பர்சோனிக் ஏவுகணை முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.

சீனா கடந்த ஜனவரி மாதம் வெளிநாட்டு கப்பல்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த அனுமதி அளித்ததை அடுத்து அண்டை நாடுகள் சீனா மீது கோபத்தில் உள்ளன.

இதனால் சீனாவை எதிர்கொள்ள உலகிலேயே மிக வேகமான சூப்பர்சோனிக் ஏவுகணையை பிலிப்பைன்ஸ் வாங்குகிறது. இந்தியா முதன்முதலாக பிலிப்பைன்ஸ்க்கு தனது ஆயுதத்தை ஏற்றுமதி செய்கிறது.

பிரமோஸ் தரையில் மட்டுமல்லாமல் கப்பல்களில் இருந்தும் பயன்படுத்கலாம். பிரமோஸ் ஒளியை விட மூன்று மடங்கு வேகத்தில் பயணிக்ககூடியது. மேலும் இலக்கை துல்லியமாக தாக்கும்.

இந்த பிரமோஸ் ஏவுகணையை சீன எல்லையில் இந்தியா நிறுத்தி உள்ளது. தென்சீனக் கடலை சீனா முழுவதுமாக சொந்தம் கொண்டாடி வருவதால், அண்டை நாடுகளான பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே, வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளும் தென்சீனக்கடலை சொந்தம் கொண்டாடி வருகின்றன.

இந்த நிலையில் பிரமோஸ் ஏவுகணையை வாங்குவதற்கு இந்திய அரசு மணிலாவிற்கு 100 மில்லியன் டாலர் கடனாக வழங்க முன்வந்துள்ளது. தேவைபட்டால் கடனின் வரி நீக்கப்படவோ அல்லது காலம் நீட்டிக்கப்படவோ வாய்ப்புள்ளது.

பிரமோஸ் ஏவுகணையை வாங்க UAE, வியட்நாம், மணிலா. பிலிப்பைன்ஸ், அர்ஜென்டினா, பிரேசில், இந்தோனேசியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் இந்தியா ஆயுதம் ஏற்றுமதியாளராக மட்டும் அல்லாமல், சீனாவுக்கு எதிராகவும் இந்த ஏவுகணையை பிலிப்பைன்ஸூக்கு வழங்கி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *