பாகிஸ்தானுடன் இணைந்து ஈரானுக்கு எதிரான வாகெடுப்பில் இருந்து வெளியேறிய இந்தியா..?

சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கோரிக்கைகளை மீறியதற்காக ஈரான் மீதான தீர்மானத்தில் இருந்து பாகிஸ்தான் மற்றும் லிபியா உடன் இணைந்து இந்தியா விலகியுள்ளது. உக்ரைன் வாக்கெடுப்பின் போது எடுத்த அதே அணிசேரா கொள்கையை இந்தியா பின்பற்றியுள்ளது.

சர்வதேச அணுசக்தி முகமையுடன் (IAEA) ஈரான் மோதல் போக்கை கையாண்டு வரும் நிலையில். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்திற்கு, 35 நாடுகளின் உறுப்பினர்களை கொண்ட IAEA அமைப்பில். 30 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

தீர்மானத்திற்கு எதிராக ரஷ்யா மற்றும் சீனா வாக்களித்துள்ளன. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் லிபியா வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளியேறின. இதன் மூலம் இந்தியா ஈரானுக்கு ஆதரவாக செயல்படுவதாகவே பார்க்கப்படுகிறது. முன்பு உக்ரைன் ரஷ்யா மோதல் தொடங்கிய போது ஐ.நாவில் ரஷ்யாவிற்கு எதிராக நடந்த வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்காமல் நடுநிலை வகித்தது.

அதேபோல் தற்போது இந்தியா ஈரானுக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் வெளியேறியுள்ளது. இந்த வாரம் புதன்கிழமை அன்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் இந்தியாவிற்கு வருகை தந்தார். அப்போது பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவர் ஆகியோரை சந்தித்தார்.

Also Read: சர்ச்சைக்கு மத்தியில் பிரதமர் மோடியை சந்தித்தார் ஈரான் வெளியுறவு அமைச்சர்..

இந்த நிலையில் தான் இந்த வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில் இந்தியா வாக்களிக்கமால் வெளியேறியுள்ளது. JCPOA கீழ் அணுசக்தி தொடர்பான உறுதிமொழிகளை செயல்படுத்துவதை நிறுத்தும் ஈரானின் முடிவால் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத இடங்களில் யுரேனியம் தடயங்கள் காணப்பட்டதாக IAEA தலைவர் கூறிய குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது.

Also Read: சீனா போரை தொடங்க தயங்காது.. நேருக்குநேர் சந்திப்பில் அமெரிக்க அமைச்சரை எச்சரித்த சீன அமைச்சர்..

2015 ஆம் ஆண்டு ஈரானால் ஒப்புக்கொள்ளப்பட்ட அணுசக்தி விவகாரங்கள் தொடர்பான கூட்டு விரிவான செயல் திட்டத்தில் இருந்து 2019 ல் அமெரிக்கா வெளியேறியது. மோதல் அதிகரித்துள்ளதால், ஈரான் அணுசக்தி வேலைகளை கண்காணிப்பதற்காக IAEA ஆல் வைக்கப்பட்ட 30 க்கும் மேற்பட்ட கேமராக்களையும் ஈரான் அகற்றியுள்ளது. ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கிடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில் இந்தியா ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வாக்கெடுப்பில் இருந்து வெளியேறியுள்ளது.

Also Read: முகமது நபி சர்ச்சை: நுபுர் சர்மாவிற்கு ஆதரவு தெரிவித்த நெதர்லாந்து பாராளுமன்ற தலைவர்..

Leave a Reply

Your email address will not be published.