யுனெஸ்கோவின் நிர்வாக குழுவிற்கு இந்தியா மீண்டும் தேர்வு.. மத்திய அமைச்சர்கள் வாழ்த்து..

ஐக்கிய நாடுகளின் 2021-25 ஆம் ஆண்டிற்கான கலாச்சார மற்றும் கல்வி அமைப்பின் நிர்வாக குழுவிற்கு இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய கலாச்சார இணை அமைச்சர் மீனாட்சி லேகி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

யுனெஸ்கோ நிர்வாக குழு என்பது UN அமைப்பின் மூன்று அரசியலமைப்பு குழுக்களில் ஒன்றாகும். மற்றவை பொது மாநாடு மற்றும் செயலகம் ஆகும். இவற்றில் பொது மாநாட்டின் மூலம் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

2021-25 ஆண்டிற்கான யுனெஸ்கோவின் நிர்வாக குழுவில் இந்தியா 164 வாக்குகள் பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தியா தவிர ஆசிய மற்றும் பசுபிக் நாடுகளான ஜப்பான், பிலிப்பைன்ஸ், சீனா, வியட்னாம் மற்றும் குக் தீவுகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

பாரிஸை தளமாக கொண்ட யுனெஸ்கோவிற்கான இந்தியாவின் நிரந்தர தூதர் இந்தியா 2021-25 ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோ நிர்வாக குழுவிற்கு 164 வாக்குகளுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

மத்திய கலாச்சார இணை அமைச்சர் மீனாட்சி லேகி தனது ட்விட்டர் பக்கத்தில், யுனெஸ்கோ நிர்வாக குழுவிற்கு இந்தியா மீண்டும் தேர்வாகி உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் வேட்புமனுவை ஆதரித்த அனைத்து உறுப்பு நாடுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றி என தெரிவித்துள்ளார்.

Also Read: பூர்வாஞ்சல் ஆறுவழிச்சாலையை நாட்டு அர்பணித்தார் பிரதமர் மோடி.. போர் விமானங்கள் தரை இறங்கி சாகசம்..

யுனெஸ்கோவின் நிர்வாக குழு 58 உறுப்பு நாடுகளை கொண்டது. இந்த யுனெஸ்கோ குழுவானது நிறுவனத்திற்கான வேலை திட்டத்தையும் மற்றும் இயக்குனர் ஜெனரலால் சமர்பிக்கப்பட்ட பட்ஜெட் மதிப்பீடுகளையும் ஆய்வு செய்கிறது. மேலும் இந்தியா யுனெஸ்கோ நிர்வாக குழுவிற்கு தேர்வானதிற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Also Read: இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் தாலிபான்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்படும்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published.