உலகிலேயே அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்து புதிய சாதனை படைத்த இந்தியா..

இந்த வருடம் இந்தியா அரிசி ஏற்றுமதியில் மற்ற நாடுகளை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளது. இது உலக அளவில் மொத்த ஏற்றுமதியில் 45 சதவீதம் ஆகும். அரிசி அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனாவிற்கு அடுத்தப்படியாக இந்தியா தான் உள்ளது.

அதேபோல் அரிசி ஏற்றுமதியிலும் சீனாவிற்கு அடுத்த இடத்திலேயே இந்தியா இருக்கிறது. இருப்பினும் கடந்த வருட இறுதியில் இருந்தே மழையினால் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால் அந்நாடு அரிசி ஏற்றுமதியில் பின்தங்கி உள்ளது. மேலும் கொரோனா தொற்றினாலும் அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு சீனா இந்தியாவிடம் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்கிறது.

பொதுவாக சீனாவின் அரிசி இறக்குமதியாளராக பாகிஸ்தான், மியான்மர், வங்கதேசம் போன்ற நாடுகளே உள்ளன. ஆனால் இந்தியா சலுகை விலையில் 1 டன் 300 டாலர் என்ற அடிப்படையில் வழங்குகிறது. இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது 40 டாலர் குறைவாகும். இந்த ஆண்டு இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 18 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.

இது கடந்த ஆண்டை விட 45 சதவீதம் அதிகம் ஆகும். மேலும் இந்தியா ஆப்ரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவிற்கு அரிசியை ஏற்றுமதி செய்கிறது. இது இல்லாமல் பாசுமதி அரிசியும் இந்தியா அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவின் அரிசி ஏற்றுமதி செய்வதற்கான கட்டமைப்பை இந்தியா மாற்றி அமைத்தால் அரிசி ஏற்றுமதி மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்தியா ஒரு மாதத்தில் ஏற்றும் அரிசியை தாய்லாந்து பத்தே நாட்களில் கப்பலில் ஏற்றிவிடுகிறது. இதனால் இந்தியாவுக்கு கூடுதல் செலவும் கால விரயமும் ஏற்படுகிறது. எனவே உள்கட்டமைப்பை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. இந்த கொரோனா நேரத்தில் மற்ற நாடுகளின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த நாடுகள் ஏற்றுமதியை குறைத்துள்ளன.

இதனால் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இந்த ஏற்றுமதி வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏழு மாதங்களில் மட்டும் இந்தியா 13 மில்லியன் டன் அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 60 சதவீதம் வளர்ச்சி ஆகும்.

Leave a Reply

Your email address will not be published.