2027 ஆம் ஆண்டிற்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும்..!

2027 ஆம் ஆண்டிற்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் என மோர்கன் ஸ்டான்லியின் தலைமை ஆகிய பொருளாதார நிபுணர் சேத்தன் அஹ்யா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் GDP தற்போது 3.4 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருக்கும் நிலையில், அடுத்த பத்து ஆண்டுகளில் இது 8.5 டிரில்லியன் டாலராக இருமடங்காக உயரும் என சேத்தன் கணித்துள்ளார். இந்தியா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆண்டுக்கு 400 பில்லியன் டாலர்களை சேர்க்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த சரக்கு மற்றும் சேவை வரி(GST), கார்ப்பரேட் வரி குறைப்புகள், முதலீட்டை ஊக்குவிக்கும் உற்பத்தி சார்ந்த திட்டங்கள், உற்பத்தி ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் முதலீட்டை ஈர்ப்பதற்கான மத்திய அரசின் முயற்சிகளை சேத்தன் பாராட்டியுள்ளார்.

இந்தியாவில் உழைக்கும் வயது மக்கள்தொகை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய சேத்தன், உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சீனாவை விட இந்தியா சிறப்பாக செயல்படும் என கணித்துள்ளார். மேலும் இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் பற்றி கூறுகையில், எதிர்காலத்தில் உலக வளர்ச்சியில் ஐந்தில் ஒரு பங்கை இந்தியா கொண்டிருக்கும் என கூறியுள்ளார்.

முன்னதாக அக்டோபர் மாதம், 2022-23 நிதியாண்டிற்கான இந்தியாவின் GDP வளர்ச்சியை 6,8 சதவீதமாக குறைத்த போதும், உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்து இருந்தது.

சமீபத்தில் இந்திய பொருளாதார உச்சி மாநாட்டில் பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், நாடு 100வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் 2047ல் இந்தியா 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என அமைச்சர் கணித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.