ரஷ்ய ஹெலிகாப்டருடன் இஸ்ரேலிய NLOS ATGMs ஏவுகணையை இணைக்கும் இந்திய விமானப்படை..

எதிரி கவச படைப்பிரிவுகளுக்கு எதிராக தனது வலிமையை அதிகரிக்கும் விதமாக இந்தியா தனது ரஷ்ய Mi-17 ஹெலிகாப்டர்களை இஸ்ரேலிய நோன்-லைன் ஆஃப் சைட் (NLOS) எதிர்ப்பு டாங்கி வழிகாட்டும் ஏவுகணைகளுடன் (ATGMs) இணைக்கிறது.

எதிர்ப்பு டாங்கி வழிகாட்டும் ஏவுகணைகள் மலை பகுதிகளில் தாழ்வாக பறக்கும் மற்றும் 30 கி.மீ தொலைவில் உள்ள தரை இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணைகள் ஏற்கனவே இந்தியா வந்துவிட்ட நிலையில் மேற்கு பகுதியில் ரஷ்ய ஹெலிகாப்டரில் பயன்பாட்டில் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இஸ்ரேலிய ஸ்பைக் NLOS டேங்க் எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணை ரஷ்ய வம்சாவளியை சேர்ந்த Mi-17V5 ஹெலிகாப்டர்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதன் மூலம் போர் காலங்களில் 30 கிலோமீட்டரில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க முடியும். எதிரிகளின் கவச படைப்பிரிவுகளுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Also Read: ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் குண்டுவெடித்ததில் 33 பேர் உயிரிழப்பு..? எச்சரித்த தாலிபான்..

தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான மோதலில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா வழங்கிய டாங்கி எதிர்ப்பு மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை உக்ரேனிய படைகள் ரஷ்யாவின் கவச படைபிரிவுகளுக்கு எதிராக பயன்படுத்தி வருகின்றன.

Also Read: இந்திய விமானப்படைக்கு மேலும் 114 மல்டி ரோல் போர் விமானங்கள்..? உள்நாட்டில் தயாரிக்க முடிவு..

இதில் பாடம் கற்றுக்கொண்டுள்ள இந்தியா, கிழக்கு லடாக் செக்டாருக்கு எதிரே உள்ள உண்மையான கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் சீனா அதிக எண்ணிக்கையிலான டாங்கிகள் மற்றும் ஆயுதமேந்திய ஹெரிகாப்டர்களை நிலைநிறுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த டேங்க் எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகளை ரஷ்ய ஹெலிகாப்டர்களுடன் இணைத்து இந்திய விமானப்படை பயன்படுத்த உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.