மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படை விமானம் கீழே விழுந்து விபத்து.. விமானி காயம்..
பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படை விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் காலை 10 மணி அளவில் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக விமானம் தொழிற்நுட்ப கோளாறு காரணமாக விமானம் பழுதடைந்து விபத்தில் சிக்கியது.
விமானம் கீழே விழும் முன்பு விமானி பாரசூட் உதவியுடன் விமானத்தில் இருந்து வெளியேறினார். தகவல் அறிந்த விமானப்படை ஏர் ஆம்புலன்ஸ் மூலம் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர்.
விமானி உயிர்தப்பினாலும் அவருக்கு காயம் ஏற்பட்டதால் அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் அவர் மேல் சிகிச்சைக்காக குவாலியர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
Also Read: பாகிஸ்தான் கடற்பரப்பில் நுழைந்த இந்திய நீர்மூழ்கிகப்பல்.. பாகிஸ்தான் எதிர்ப்பு..
விபத்து நடந்த இடம் பினத் மாவட்ட விமானப்படை தலைமையகத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாங்காபாத் என்ற இடத்தில் நடந்துள்ளது. தகவல் அறிந்த உடன் 10 நிமிடங்களில் விபத்து நடந்த பகுதிக்கு சென்றுவிட்டதாக பிஹன்ட் எஸ்பி மனோஜ் குமார் சிங் கூறினார். மேலும் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Also Read: இந்தியா வரும் நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் விமானம்.. சீனாவுக்கு எதிராக களமிறக்க திட்டம்..