ஸ்வீடன் நிறுவனத்தின் AT4 சிங்கிள் ஷாட் அமைப்பை வாங்கும் இந்திய இராணுவம்..

இந்திய இராணுவம் மற்றும் இந்திய விமானப்படைக்கு AT4 டாங்கி எதிர்ப்பு ஏவுகணை வாங்கப்பட உள்ளது. இதற்காக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த சாப் (SAAB) நிறுவனத்துடன் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த AT4CS AST சிங்கிள்-ஷாட் அமைப்பு ஒரு ப்ரீச் அல்லது பிளாஸ்ட் மோடு கொண்ட டேன்டெம் வார்ஹெட்டை வழங்குகிறது. இந்த AT4CS AST அமைப்பின் மூலம் எதிரியின் டாங்கிகள், கவச வாகனங்கள், ஹெலிகாப்டர்கள், கட்டிடங்கள் மற்றும் பதுங்கு குழிகள் போன்ற இலக்குகளை தாக்கி அழிக்க முடியும்.

இந்திய இராணுவம் ஏற்கனவே சாப் நிறுவனம் தயாரித்த கார்ல்-கஸ்டாப் அமைப்பை 1970 முதல் பயன்படுத்தி வருகிறது. இந்த சிங்கிள் ஷாட் AT4CS AST அமைப்பை தோள்களில் வைத்து பயன்படுத்த முடியும். இது 9 கிலோவிற்கு குறைவான எடையும் 20-300 மீட்டர் வரையிலான தாக்குதல் வரம்பையும் கொண்டுள்ளது.

AT4CS AST அமைப்பு 84 மிமீ காலிபர் வார்ஹெட்டுடன் மேம்பட்ட செயல்திறனை வழங்குகிறது. சாப் இந்தியாவின் தலைவர் ஓலா ரிக்னெல் கூறுகையில், AT4 அமைப்பு இலகுரக ஒற்றை-ஷாட் லைட் வெயிட் அமைப்பு என கூறியுள்ளார்.

இந்த ஒற்றை-ஷாட் ஆயுதம் ஒரு போட்டி திட்டத்தின் மூலம் இந்திய ஆயுதபடைகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஸ்வீடனின் சாப் நிறுவனத்திற்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.