ஆளில்லா செயற்கை நுண்ணறிவு வாகனத்தை சோதனை செய்ய உள்ள இந்திய இராணுவம்..

கண்காணிப்பு மற்றும் தளவாட நடவடிக்கைகளுக்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஆளில்லா வாகன சோதனைகளை அனைத்து நிலப்பரப்புகளிலும் இந்திய இராணுவம் விரைவில் சோதனை நடத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வாகனம் கல்யாணி குழுமத்தால் பேட்டரி மற்றும் மோட்டார் இரண்டிலும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. திங்களன்று டெல்லியில் நடந்த பாதுகாப்பு அமைச்சகத்தின் முதல் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கில் காட்கிக்கு வைக்கப்பட்டிருந்த 75 தயாரிப்புகளில் இந்த வாகனமும் இடம்பெற்றிருந்தது.

இந்த வாகனம் பேட்டரியில் 6 மணி நேரமும், மோட்டாரில் 14 மணி நேரமும் இயங்க கூடியது. மேலும் 3 கிலோமீட்டர் வரை செயல்பாட்டு வரம்பை கொண்டுள்ளது. 500 கிலோ வரை பேலோட்களை சுமக்க கூடியது. 2 கிலோமீட்டர் தூரம் செல்லும் பகல் மற்றும் இரவு கேமராக்கள் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளன. அதாவத ஒரு கட்டளை மையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் வரை பார்க்க முடியும்.

இந்த வாகனம் ஏற்கனவே காலாட்படை மற்றும் கவச பிரிவுகளுடன் இரண்டு சோதனைகளுக்கு உட்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை எடுத்து செல்ல காலாட்படை இந்த வாகனத்தை பயன்படுத்தியது. அதேநேரம் எதிரிகளின் நிலைகளை கண்காணிக்க ஒரு உளவு வாகனமாக இந்த வாகனத்தை கவச பிரிவுகள் படை பயன்படுத்தியுள்ளனர்.

இந்த வாகனம் மேப்பிங், பாதை திட்டமிடல் மற்றும் தடையை கண்டறிவதற்கான பல சென்சார்களை கொண்டுள்ளது. மேலும் -20 டிகிரி முதல் +20 டிகிரி வரையிலான வெப்பநிலையில் செயல்பட முடியும். இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற இந்தோ-ஜப்பான் இராணுவ பயிற்சியின் ஒரு பகுதியாகவும் இந்த வாகனம் இருந்தது.

IED வெடிபொருட்களை கண்டறிந்து செயலிழக்க வைப்பதற்கும் இந்த வாகனம் பயன்படுத்தப்படும். அடுத்த மாதம் லடாக்கில் அதிக உயர சோதனை மற்றும் அதன் பின்னர் பாலைவன சோதனைகளுக்கும் இந்த வாகனம் உட்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர மேலும் பல செயற்கை நுண்ணறிவு வாகனங்கள் மேம்பாட்டில் உள்ளன. மேலும் 750 கிலோ பேலோட் திறன் கொண்ட வாகனமும் மேம்பாட்டில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.