2019 புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட கடைசி பயங்கரவாதியை போட்டுதள்ளிய இந்திய இராணுவம்..?

2019 ஆம் ஆண்டு புல்வாமாவில் CRPF வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய எஞ்சியிருந்த கடைசி பயங்கரவாதியை அனந்த்நாக்கில் நடத்த என்கவுன்டரில் இராணுவம் சுட்டுத்தள்ளியதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீர் ஐஜி விஜய் குமார் கூறுகையில், டிசம்பர் 30 ஆம் தேதி நடந்த என்கவுன்டரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் உயர்மட்ட கமாண்டர் சமீர் தார் மற்றும் மேலும் இருவர் கொல்லப்பட்டனர். அவற்றில் ஒருவனான சமீர் தார் போலிஸ் பதிவேடுகளில் உள்ள படங்களில் ஒத்திருப்பதால் போலிசார் சந்தேகமடைந்தனர்.

இந்த நிலையில் DNA பரிசோதனைக்கு பிறகு அவனது அடையாளம் உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட கடைசி பயங்கரவாதி சமீர் தார் என காஷ்மீர் ஐஜி குமார் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் புதன்கிழமை நடந்த என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அவற்றில் ஒருவன் பாகிஸ்தானை சேர்ந்தவன் மற்ற இரண்டு பேர் உள்ளூர் பயங்கரவாதிகள் என அடையாளம் காணப்பட்டது. இவர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் இணைந்து தீவீரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

Also Read: காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. 4 வீரர்கள் காயம்…

கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளில் இருவர் ஜம்முகாஷ்மீரில் போலிசார் பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையவர்கள். இந்த தாக்குதலில் 3 போலிசார் கொல்லப்பட்டனர் மற்றும் 11 போலிசார் காயமடைந்தனர். கடந்த 2019 ஈம் ஆண்டு புல்வாமாவில் நட்ந்த பயங்கரவாத தாக்குதலில் 40 CRPF வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தற்போது அந்த தாக்குதலில் ஈடுபட்ட கடைசி பயங்கரவாதியை இராணுவம் சுட்டு கொன்றுள்ளது.

Also Read: ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.

Leave a Reply

Your email address will not be published.