தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பாவின் கமாண்டரை போட்டுதள்ளிய இந்திய இராணுவம்..
திங்களன்று ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான ஹார்வான் பகுதியில் பாதுகாப்பு படையினருடனான துப்பாக்கி சண்டையில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கமாண்டர் சலீம் பர்ரே மற்றும் ஹபீஸ் என்ற மற்றொரு பயங்கரவாதியும் இருவேறு என்கவுன்டரில் கொல்லப்பட்டனர்.
திங்கள் மதியம் ஸ்ரீநகரில் உள்ள ஷாலிமாரில் லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் சலீம் பர்ரே மற்றும் ஒரு பாகிஸ்தான் பயங்கரவாதி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதற்கு இந்திய இராணுவம் கொடுத்த பதிலடியில் லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் சலீம் பர்ரே கொல்லப்பட்டான். இது குறித்து பேசிய காஷ்மீர் IGP விஜய் குமார், இது ஒரு மிகப்பெரிய வெற்றி. 2016 முதல் அவன் செயல்பட்டு வருகிறான். சலீம் 12 பொதுமக்களை கொன்றுள்ளான் என கூறினார்.
ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் முதல் 10 இலக்குகளில் சலீம் பர்ரேவும் ஒருவன். சலீம் மீது ஜம்மு காஷ்மீர் போலிசார் 11 FIR பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீநகரின் ஷாலிமார் பகுதிக்கு அருகில் உள்ள காசு என்ற இடத்தில் ஜம்மு காஷ்மீர் போலிசார் மற்றும் CRPF வீரர்கள் நடத்திய தாக்குதலில் மற்றொரு பயங்கரவாதி கொல்லப்பட்டான்.
Also Read: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து விசாரணை முடிவு.. அடுத்த வாரம் அறிக்கை தாக்கல்..?
கொல்லப்பட்ட இரண்டாவது பயங்கரவாதி ஹபீஸ் என்கிற ஹம்சா என அடையாளம் காணப்பட்டான். இவன் பந்திபோராவில் இரண்டு போலிஸ் மற்றும் ஒரு CRPF வீரர் கொல்லப்பட்டதில் தொடர்புடையவன். மேலும் புச்போராவில் உள்ள பிலால் காலனி சௌராவை சேர்ந்த நதஃப் ஹனீப் கான் என்ற பொதுமக்கள் ஒருவரையும் கொலை செய்துள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
Also Read: 2019 புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட கடைசி பயங்கரவாதியை போட்டுதள்ளிய இந்திய இராணுவம்..?