ஸ்பைக் ஏவுகணைகளுடன் கூடிய கல்யாணி M4 கவச வாகனங்களை பெற உள்ள இந்திய இராணுவம்..?

கிழக்கு லடாக்கில் சீனாவுடன் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், புனேவை தளமாக கொண்ட கல்யாணி குழுமத்தின் பாரத் போர்ஜ் நிறுவனத்திடம் இருந்து மேலும் பல M4 கவச வாகனங்களை ராணுவம் வாங்க உள்ளது.

இருப்பினும் எண்ணிக்கை வெளியிடப்படடிவில்லை. பாரத் போர்ஜ் நிறுவனம் ஏற்கனவே இந்திய இராணுவத்திற்கு 60 கவச வாகனங்களும், ஐ.நா அமைதி படைக்கு 30 கவச வாகனங்களையும் வழங்கியுள்ளது. இந்த புதிய M4 கவச வாகனங்களில் இஸ்ரேலிய ஸ்பைக் எதிர்ப்பு தொட்டி வழிகாட்டும் எவுகணைகள் (ATGM) பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த புதிய M4 கவச வாகனங்களில் ATGM ஏவுகணைகள் தவிர, 7.62 மிமீ துப்பாக்கியை தானியங்கி கோபுரத்துடன் 20 மிமீ துப்பாக்கியாக மேம்படுத்துவது குறித்தும் இராணுவம் பரிசீலித்து வருகிறது. இந்த M4 கவச வாகனம் கடினமான நிலப்பரப்பு, சுரங்க மற்றும் IED அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கூடிய பகுதிகளில் திறமையாக செயல்படச்கூடிய வாகனமாகும்.

இந்த M4 கவச வாகனம் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகம், 2.3 டன்கள் பேலோடு மற்றும் சுமார் 800 கிலோமீட்டர்கள் இயங்கும் திறன் கொண்டது. ஆட்டோமேட்டட் கியர்பாக்ஸ் கொண்ட இந்த வாகனம், ஓட்டுனர் உட்பட 10 வீரர்களை சுமந்து செல்லக்கூடியது. குளிர்ச்சி மற்றும் வெப்பமூட்டும் அமைப்பு இருப்பதால், கடுமையான பாலைவனங்கள் மற்றும் குளிச்சியான பனிமலை பிரதேசங்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.

புனேவில் உள்ள பாரத் போர்ஜ் தொழிற்சாலையில் ஆண்டுக்கு 40 M4 கவச வாகனங்கள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. தற்போது ஆண்டுக்கு 100 கவச வாகனங்களை தயாரிக்கும் வகையில் ஆலையை மேம்படுத்த உள்ளதாக பாரத் போர்ஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது பாரத் போர்ஜ் நிறுவனம் 95 சதவீத வாகனங்களை உள்நாட்டிலும் 5 சதவீத வாகனங்களை வெளிநாட்டில் இருந்தும் இறக்குமதி செய்கிறது.

DefExpoவில் பேசிய அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், விரைவில் ஆண்டுக்கு 100 கவச வாகனம் மற்றும் 100 சதவீதமும் இந்தியாவிலேயே தயாரிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். பாரத் போர்ஜ் தென்னாப்ரிக்காவின் உலகளாவிய விண்வெளி மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான பாரமவுண்ட் குழுமத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

அந்நிறுவனத்தின் அறிவுசார் சொத்துக்களை இருநிறுவனங்களும் பகிர்ந்து கொள்கின்றன. DefExpoவில் பேசிய பாரமவுண்ட் குழுமத்தின் நிறுவனர் ஐவர் இச்சிகோவிட்ஸ், இந்தியாவை தங்கள் முதன்மை கூட்டாளியாக மாற்ற விரும்புகிறோம் என்றார். இந்தியா மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக மாற முடியும். எனவே நாங்கள் இங்கு முதலீடு செய்தோம் என தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 2021 ஆம் ஆண்டு பாரத் போர்ஜ் கல்யாணி M4 கவச வாகனங்களை இந்திய இராணுவத்திற்கு வழங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து 117,95 கோடி மதிப்பிலான அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ் ஆர்டரை பெற்றது. தற்போது இராணுவம் கூடுதல் கவச வாகனங்களை ஆர்டர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.