பாக், ஆப்கன், பங்களாதேஷை சேர்ந்த 3,117 சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை..? நித்யானந்த் ராய் தகவல்..
இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த 3,117 சிறுபான்மை சமூகத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய்ன் உள்த்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களைவில் தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் கே கேசவ ராவ் கேள்வி எழுப்பினார். அவர் 2018, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்து, சீக்கிய, ஜெயின் மற்றும் கிறிஸ்துவ சிறுபான்மையிரிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் எத்தனை அதில் எத்தனை பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நித்யானந்த் ராய், 2018, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷை சேர்ந்த சிறுபான்மையினரான இந்து, சீக்கிய, ஜெயின் மற்றும் கிறிஸ்துவ சமூகத்தினரிடம் இருந்து 8,244 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக கூறினார். அவற்றில் 3,117 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் ராய் தெரிவித்தார்.
மேலும் அகதிகள் உட்பட அனைத்து வெளிநாட்டினரும் வெளிநாட்டினர் சட்டம் 1946, வெளிநாட்டினர் பதிவு சட்டம் 1939, பாஸ்போர்ட் சட்டம் 1920 மற்றும் குடியுரிமை சட்டம் 1955 ஆகியவற்றின் கீழ் நிர்வகிக்கப்படுவதாக கூறியுள்ளார். மேலும் கூறிய ராய், டிசம்பர் 14, 2021 வரை ஆப்கானிஸ்தானில் இருந்து 1,152 விண்ணப்பங்களும், நாடற்றவர்களிடம் இருந்து 428, இலங்கை மற்றும் அமெரிக்காவில் இருந்து 223, நேபாளத்தில் இருந்து 189 மற்றும் வங்கதேசத்தில் இருந்து 161 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக அப்துல் வஹாபியின் கேள்விக்கு ராய் பதிலளித்தார்.
Also Read: அன்னை தெரேசா சிறுமிகள் காப்பகத்தில் மதமாற்றம்.. வழக்கு பதிவு செய்தது குஜராத் காவல்துறை..
பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து டிசம்பர் 31, 2014 அல்லது அதற்கு முன் இந்தியாவில் நுழைந்த இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், மற்றும் பார்சிகள் அல்லது இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்காக மத்திய அரசு 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை (CAA) அறிமுகப்படுத்தியது.
Also Read: பணத்திற்காகவே பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பங்கேற்றோம். பொதுநலனுக்காக அல்ல: இம்ரான்கான்
ஆனால் இதற்கு எதிர்கட்சிகள், அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் CAA தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். 2019 மற்றும் 2020ல் குடியுரிமை திருத்த சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றிகு எதிராக டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் பல மாதங்களாக போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read: இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை..