லிதுவேனியாவில் இந்திய தூதரகம் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு..?

லிதுவேனியாவின் தலைநகரம் வில்னியஸில் இந்திய தூதரகம் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கேப்ரியலியஸ் லாண்ட்ஸ்பெர்கிஸ் உறுதிபடுத்தியுள்ளார்.

குட்டி ஐரோப்ப நாடான லித்துவேனியாவில் இந்திய தூதரம் இல்லை. ஆனால் லிதுவேனியாவிற்கு போலந்தின் வார்சாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் சேவை செய்யப்படுகிறது. இந்த வார தொடக்கத்தில் லிதுவேனியா வெளியுறவு அமைச்சர் கேப்ரியலியஸ் லாண்ட்ஸ்பெர்கிஸ் இந்தியாவிற்கு வருகை தந்தார்.

இந்திய பயணத்தில் அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கேப்ரியலியஸ் லாண்ட்ஸ்பெர்கிஸ், இந்திய பிரதமர் உடனான தனது சந்திப்பின் போது, இந்தியா தனது தூதரகத்தை எதிர்காலத்தில் வில்னியஸில் திறக்க உள்ளதாக கூறினார்.

இந்தியா மற்றும் லிதுவேனியா ஆகிய இருநாடுகளும் 1992 ஆம் ஆண்டு முதல் ராஜதந்திர உறவுகளை கொண்டுள்ளன. லிதுவேனியாவிற்கு போலந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலமாகவே நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் லிதுவேனியா 2008 ஆம் ஆண்டு புதுடெல்லியில் தனது தூதரகத்தை திறந்தது.

இந்திய அதிகாரிகள் 2005ல் லிதுவேனியாவில் தூதரகத்தை திறப்பதற்கான தனது விருப்பத்தை வெளிபடுத்திய நிலையில், இதுவரை அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது தான் இந்திய தூதரகம் திறக்கப்பட உள்ளதாக கேப்ரியலியஸ் லாண்ட்ஸ்பெர்கிஸ் அறிவித்துள்ளார்.

இந்த வருட துவக்கத்தில் லிதுவேனியாவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகம் ரீதியில் மோதல் நடைபெற்றது. முதலில் தைவான் லிதுவேனியாவில் உள்ள தனது தூதரகத்தை தைபே என இருப்பதை தைவான் என மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தது. அதேபோல் தைவானை ஒரு நாடாகவும் அங்கீகரித்தது.

Also Read: பாக். கராச்சியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பெண்.. 3 சீனர்கள் உயிரிழப்பு..

இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தால் மோதல் வெடித்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் லிதுவேனியா சீன போன்களை பயன்படுத்த வேண்டாம், அதனை தூக்கி குப்பையில் வீசுங்கள் என மக்களை அறிவுறுத்தியது. ஏனென்றால் சீன மொபைல்களில் தைவான் தனி நாடு மற்றும் திபெத் ஒரு சுதந்திர நாடு போன்ற ஜனநாயக வார்த்தைகளை பயன்படுத்த முடியவில்லை. அதனை பயன்படுத்துவோரை சீனா கண்காணிப்பதாக குற்றம் சாட்டி சீன மொபைல்களுக்கு தடை விதித்தது.

பின்னர் லிதுவேனியா தூதரகம் தைவானில் திறக்க முடிவு எடுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த சீனா லிதுவேனியாவில் இருந்து அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்வதை நிறுத்தியது. மேலும் தனது நட்பு நாடுகளையும் லிதுவேனியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டது.

Also Read: சீனாவை நம்பியதால் பொருளாதாரத்தை இழந்த தாய்லாந்து.. விலகி இருக்க முடிவு..

நிலைமை பெரிதாக லிதுவேனியாவிற்கு ஆதரவாக ஐரோப்பிய யூனியன் களத்தில் இறக்கியது. ஆனால் ஐரோப்பிய யூனியன் சீனாவுடன் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்து வருகின்றன. இதனால் வர்த்தகத்தை நிறுத்த போவதாக சீனா மறைமுகமாக ஐரோப்பிய யூனியனை மிரட்டியதால், லிதுவேனியாவை சீனாவிற்கு ஆதரவாக செயல்படும் படி சில ஐரோப்பிய நாடுகள் கட்டாயப்படுத்தின.

இந்த நிலையில் சீனா உடனான உறவுகளை மேம்படுத்தாவிட்டால் லிதுவேனியாவில் உள்ள ஜெர்மன் தொழிற்சாலைகள் மூடப்படும் என லிதுவேனியாவை ஜெர்மனி மிரட்டியதாக அப்போது தகவல் வெளியாகின. இந்த நிலையில் லிதுவேனிய ஜனாதிபதி கிடானாஸ் நௌசேடா, தைவான் பெயரை பயன்படுத்தி அலுவலகத்தை திறக்க அனுமதித்தது தவறு என கூறினார்.

Also Read: ரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்ற பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி.. வெளிவந்த அறிக்கை..

மேலும் ஒரே சீனா என்ற கொள்கையை ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் லிதுவேனியா இந்தியாவுடன் நெருக்கம் காட்ட துவங்கியுள்ளது. இந்த வார துவக்கத்தில் இந்தியா வந்த லிதுவேனியா வெளியுறவு அமைச்சர் லிதுவேனியாவில் இந்திய தூதரகம் திறக்கப்படுவதை உறுதிபடுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.