ஏழு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய வானிலை மையம் கனமழை எச்சரிக்கை..

இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்ட்ரா, கோவா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மிக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் தண்ணீர் தேங்கியதால் வீடுகளுக்குள் புகுந்தது. சென்னையில் மழை நின்ற பிறகும் இன்னும் வெள்ளநீர் வடியாததால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. அதிக கனமழையால் அங்கும் மழை நீர் தேங்கி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த அரசாங்கங்கள் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் அரபிக்கடலில் புதிய குறைந்த காற்றலுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக கூறியுள்ளது. இது நவம்பர் 15 அன்று வங்காள விரிகுடா மற்றும் அந்தமானை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவா, மகாராஷ்ட்ரா, கர்நாடகா, ஒடிசா, தமிழகம், ஆந்திரா, கேரளா மற்றும் யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது. நவம்பர் 17 ஆம் தேதி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நவம்பர் 18 ஆம் தேதி ஆந்திராவை நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

தற்போது கேரளாவின் இடுக்கி, திருச்சூர், எர்ணாகுளம் ஆகிய மூன்று மாவட்டங்கணுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மழை அதிகரித்ததால் நேற்று இடுக்கி அணை திறக்கப்பட்டது. அதேபோல் முல்லை பெரியாறு அணையும் நிரம்பி வருவதால் எப்போது வேண்டுமானாலும் அணை திறக்கப்படலாம். வங்காள விரிகுடாவை ஒட்டியுள்ள மீனவர்கள் நவம்பர் 15,16,17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *