மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை ரகசியமாக கடலில் இறக்கிய இந்திய கடற்படை..

இந்தியா தனது மூன்றாவது அரிஹந்த் வகை அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பலை விசாகப்பட்டினத்தில் கடல் சோதனையில் இறக்கியுள்ளதாக செயற்கைகோள் படங்களை மேற்கோள் காட்டி இங்கிலாந்தை தளமாக கொண்ட ஜேன்ஸ் டிஃபென்ஸ் வீக்லி பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நீர்மூழ்கி கப்பல் குறித்து இந்திய கடற்படை வெளிப்படையாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இந்தியா அணுசக்தியில் இயங்கும் நான்கு அரிஹந்த் வகை நீர்மூழ்கி கப்பலை கட்ட திட்டமிடப்பட்டு அவற்றில் முதல் நீர்மூழ்கி கப்பலான INS அரிஹந்த் 2016ல் இயக்கப்பட்டது. இரண்டாவது நீர்மூழ்கி கப்பலான INS அரிகாட் 2017 முதல் மார்ச் 2021 வரை கடல் சோதனையை முடித்தது. அடுத்த வருடம் சேவையில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மூன்றாவது அரிஹந்த் வகை பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கி கப்பலை(SSBN) நவம்பர் 23 அன்று ரகசியமாக இந்தியா கடலில் இறக்கியுள்ளதாக ஜேன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இந்த மூன்றாவது நீர்மூழ்கி கப்பலுக்கு பெயர் சூட்டப்படாத நிலையில் S4 என்ற குறியீட்டுடன் அழைக்கப்படுகிறது.

INS அரிஹந்த் 6,000 டன் எடை மற்றும் 111.6 மீட்டர் நீளம் கொண்டது. ஆனால் அரிஹந்துடன் ஒப்பிடும் போது S4 7,000 டன் எடை மற்றும் 125.4 மீட்டர் நீளம் கொண்ட பெரிய நீர்மூழ்கி கப்பல் ஆகும். அணு ஆயத ஏவுகணைகளை ஏவுவதற்கு மற்ற நீர்மூழ்கி கப்பலில் நான்கு குழாய்கள் மட்டுமே இருக்கும் நிலையில் S4ல் அதன் கூடுதல் நீளம் 8 ஏவுகணை குழாய்களை கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

INS அரிஹந்த் மற்றும் அரிகாட் நீர்மூழ்கி கப்பலில் பாலிஸ்டிக் ஏவுகணைகளான SLBM, K-4, K-5 ஆகியவை முறை 750 கி.மீ முதல் 5,000 கி.மீ வரை தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. S-4 தற்போது கடலில் இறக்கியுள்ள நிலையில் நான்காவது அரிஹந்த் வகை கப்பலான S-4* தற்போது கட்டுமானத்தில் உள்ளது. 2025ல் சேவையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: DRDO உடன் இணைந்து ஐந்தாம் தலைமுறை AMCA போர் விமானத்தை உருவாக்கி வரும் HAL..

இது தவிர ப்ராஜெக்ட் 75 ஆல்பா திட்டத்தின் கீழ் அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கி கப்பலை (SSN) வகையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.1.2 லட்சம் கோடி மதிப்பில் ஆறு நீர்மூழ்கி கப்பல் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு முதல் நீர்மூழ்கி கப்பல் 2032 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த SSN நீர்மூழ்கி கப்பல், அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் நீர்மூழ்கி கப்பல் அரிஹந்த் SSBN வகை போல் இல்லாமல், அணுசக்தியில் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல் ஆகும்.

Also Read: 5ஆம் தலைமுறை தேஜஸ் MK 2 போர் விமானத்திற்கு ஆர்டர் கொடுத்த இந்திய விமானப்படை?

அதாவது SSBN போல் அணு ஆயுத பாலிஸ்டிக் ஏவுகணைகளை எடுத்து செல்லாது. மாறாக நீண்ட தூரம் சென்று தாக்கும் கப்பல் எதிர்ப்பு, தரைவழி தாக்குதல் ஏவுகணைகள் மற்றும் டார்பிடோக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஆறு நீர்மூழ்கி கப்பலும் 6,000 டன் எடை கொண்டது என கூறப்படுகிறது. இது தவிர S-5 வகை அணு சக்திய்ல் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கி கப்பல் (SSBN) உருவாக்கப்பட்டு வருகிறது. இது அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலை விட இரண்டு மடங்கு எடை கொண்டதாக இருக்கும். அதாவது இந்த S-5 வகை நீர்மூழ்கி கப்பல் 13,500 டன் எடை கொண்டாதாக இருக்கும்.

Also Read: ஹைப்பர்சோனிக் ஏவுகணையை விரைவாக உருவாக்க வேண்டும்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Leave a Reply

Your email address will not be published.