1,000 டன் உணவு பொருட்களுடன் கொமோரோஸ் நாட்டை அடைந்த இந்திய கடற்படை கப்பல் INS ஜலாஷ்வா

தெற்கு ஆப்ரிக்க தீவு நாடான கொமோரோஸ்க்கு இந்தியா 1000 டன் அளவுக்கு உணவு பொருட்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தோஹிர் தோல் கமல் மற்றும் கடல் மற்றும் விமானபோக்குவரத்து துறை அமைச்சர் டீஜே அஹமதா சான்ஃபி ஆகியோரும், இந்தியா சார்பில் வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

கொமோரோஸ் மடகாஸ்கர் அருகே உள்ள ஒரு தீவு நாடாகும். அங்கு இந்தியா இராணுவ தளம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அண்டை நாடுகளுக்கு உதவும் வகையில் மிஷன் சாகர் திட்டத்தை கடந்த ஆண்டு இந்திய அரசு தொடங்கி வைத்து அந்தந்த நாடுகளுக்கு உதவி வருகிறது.

மிஷன் சாகர் திட்டத்தின் கீழ் ஏற்கனவே கடந்த ஆண்டு இந்தியாவின் சார்பில் கொமோரோஸ் நாட்டிற்கு தேவையான மருந்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் ஒரு மருத்துவ குழுவும் அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் இரண்டாவது முறையாக இந்தியாவின் மிகப்பெரிய கப்பலான INS ஜலாஷ்வா ஞாயிற்று கிழமை ஆயிரம் கிலோ உணவு பொருட்களுடன் கொமோரோஸ் நாட்டில் உள்ள அன்ஜோவான் துறைமுகத்தை சென்றடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *