மேற்கு கடற்பரப்பில் வெற்றிகரமாக போர் பயிற்சி மேற்கொண்ட இந்திய கடற்படை..

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கடற்படை தளபதிகள் மாநாடு திங்கள் அன்று தொடங்கியது. இதில் பாதுகாப்பு, புவிசார் மூலோபாய நிலைமை மற்றும் உக்ரைன், ரஷ்யா மோதல் பற்றி விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கடற்படை தளபதிகள் நான்கு நாள் மாநாட்டில் முக்கிய செயல்பாடுகள், பொருட்கள், தளவாடங்கள், மனித வள மேம்பாடு, பயிற்சி மற்றும் நிர்வாக செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்ய உள்ளனர். மேலும் போர் திறனை மேம்படுத்துவதற்கும், ஆயுதங்கள் மற்றும் சென்சார்களின் செயல்திறன், கடற்படை தயார்நிலை, தற்போதைய கடற்படை திட்டங்கள், மேக் இன் இந்தியா திட்டத்தில் கவனம் செலுத்துதல் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட உள்ளன.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் மாநாட்டில் உரையாற்றுகிறார் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடற்படை தளபதிகளுடன் உரையாடுகிறார். ஏப்ரல் 22 அன்று இந்திய கடற்படை மேற்கு கடற்பரப்பில் ஆயுதம் மற்றும் ஏவுகணை தாக்குதல் பயிற்சிகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியில் 15 போர்கப்பல்கள், நீர்மூழ்கிக்கப்பல்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான கடல் ரோந்து, விமானங்கள், ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் மற்றம் ஆளில்லா வான்வழி வாகனங்கள் ஆகியவை பங்கேற்றன. மேற்கத்திய கடற்படையின் கட்டளை அதிகாரியின் தலைமையின் கீழ் இந்த பயிற்சி மேற்கொல்லப்பட்டது.

Also Read: ரஷ்ய ஹெலிகாப்டருடன் இஸ்ரேலிய NLOS ATGMs ஏவுகணையை இணைக்கும் இந்திய விமானப்படை..

இந்த போர்பயிற்சியில் இந்த கடற்படையின் வீர் கிளாஸ், தல்வார் கிளாஸ் மற்றும் பிரம்மபுத்திரா கிளாஸ் போர்கப்பல்கள் வான் எதிர்ப்பு போர்பயிற்சிகளை மேற்கொண்டன. பிரம்மபுத்திரா வகுப்பு போர்கப்பல், பணிநீக்கம் செய்யப்பட்ட மற்றொரு கடற்படை போர்கப்பலை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

Also Read: இராணுவத்திற்கு அதிகம் செலவு செய்யும் நாடுகள்.. முதல் 3 இடத்திற்குள் இந்தியா..

அதேபோல் நீருக்கடியில் ஏவப்பட்ட ஏவுகணை அதன் இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு கடந்த செப்டம்பரில் பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட ஆப்ரிக்க அவென்யூவில் உள்ள பாதுகாப்பு அமைச்சக அலுவலக வளாகத்தில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.