பாகிஸ்தான் கடற்பரப்பில் நுழைந்த இந்திய நீர்மூழ்கிகப்பல்.. பாகிஸ்தான் எதிர்ப்பு..

இந்திய நீர்மூழ்கி கப்பல் தங்கள் நாட்டு பகுதிக்குள் ஊடுருவியதாக பாகிஸ்தான் இராணுவம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. பெரிஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் நீர்மூழ்கி கப்பல் ஒன்று செல்வது பதிவாகியுள்ளது.

கடந்த அக்டோபர் 16 ஆம் தேதியன்று இந்தியாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று பாகிஸ்தான் கடல் எல்லையில் ஊடுருவியதாக பாகிஸ்தான் இராணுவம் கூறியுள்ளது. ட்ரோனில் இருந்து பெரிஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை அந்நாட்டு இராணுவம் வெளியிட்டுள்ளது.

மேலும் இந்திய நீர்மூழ்கி கப்பலை நாங்கள் கண்டுபிடித்து இருப்பது இது மூன்றாவது முறை என அந்நாடு தெரிவித்துள்ளது. இருப்பினும் அந்த வீடியோ உண்மைதான என தெரியவில்லை. இது குறித்து இந்திய தரப்பில் அறிக்கை ஏதும் இல்லை.

கடல் எல்லையை பாதுகாக்க கண்காணிப்பை பாகிஸ்தான் தீவிரபடுத்தி உள்ளது. நாள் முழுவதும் கண்காணித்து வருகிறது. இந்த நீர்மூழ்கி கப்பல் கராச்சியில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் தென்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது குஜராத் அருகே பாகிஸ்தான் எல்லையில் இந்த நீர்மூழ்கி கப்பல் தென்பட்டுள்ளது.

Also Read: இந்தியா வரும் நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் விமானம்.. சீனாவுக்கு எதிராக களமிறக்க திட்டம்..

பெரிஸ்கோப் என்பது மறைந்திருந்தப்படி கண்காணிக்கும் ஒரு ஒளியியல் கருவி ஆகும். இதன்மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டு அது இந்திய நீர்மூழ்கி கப்பல் என பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தானின் செய்தி தொடர்பாளர் ஒருவர் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து பாகிஸ்தான் இராணுவம் இந்திய நீர்மூழ்கி கப்பலை நுழையவிடாமல் தடுத்ததாக கூறியுள்ளார்.

Also Read: இந்தியா அமெரிக்கா இடையே போர் பயிற்சி.. போர் பயிற்சியில் மெட்ராஸ் படை வீரர்கள்.. இலங்கையுடன் நிறைவு..

Leave a Reply

Your email address will not be published.