இந்த நிதியாண்டு இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்: உலக வங்கி

உலக வங்கி டிஜிடைலைசேசன் மற்றும் சர்வீசஸ் லெட் டெவலப்மென்ட் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் (2021-22) 8.3 சதவீதம் வளர்ச்சி அடையும் என உலக வங்கி கணித்துள்ளது.

கொரோனா தொற்றை இந்தியா எதிர்கொள்ளும் வேகம் மற்றும் தடுப்பூசி செலுத்துதல், வேலைவாய்ப்புகள், விவசாயம் மற்றும் தொழிலாளர் சீர்திருத்தங்கள் ஆகியவற்றை கொண்டு அடுத்த நிதி ஆண்டிற்கான அறிக்கை வெளியிடப்படும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியை இந்தியா அடையும் என கணித்திருந்த நிலையில் கொரோனா முதல் அலையால் இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் இந்திய பொருளாதாரம் சற்று விழ்ச்சியை கண்டது. முதல் அலைக்கு பிறகு சற்று மீண்ட பொருளாதாரம் இரண்டாவது அலையால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த நிதியாண்டில் ஊரடங்கின் போது இந்தியாவின் ஜிடிபி 24.4 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 20.2 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

Also Read: இந்தியாவின் வளர்ச்சி நிலையானது.. இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீட்டை உயர்த்திய மூடிஸ்..

கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு பல்வேறு துறைகளில் மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாம் மீண்டு வந்தாலும் இன்னும் சமமற்றதாகவே உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

Also Read: இந்தியாவின் ஏற்றுமதி முதல்முறையாக 100 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்து சாதனை..

பெரும் நிறுவனங்கள், உற்பத்தி மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீண்டு வந்துள்ளன. ஆனால் தனிநபர்கள், பெண்கள், சிறு நிறுவனங்கள் ஆகியவை பின்தங்கி உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் இந்தியாவின் மதிப்பை உயர்த்தி எதிர்மறையில் இருந்து நிலையானது என மாற்றியது குறிப்பிடத்தக்கது.

Also Read: நர்மதா ஆற்றின் குறுக்கே 32 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட இந்தியாவின் முதல் 8 வழிப்பாலம்..

Leave a Reply

Your email address will not be published.