இந்தியாவின் ஏற்றுமதி முதல்முறையாக 100 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்து சாதனை..

இந்தியாவின் ஏற்றுமதி செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 100 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்து சாதனை படைத்துள்ளது. ஒரு காலாண்டில் மட்டும் இந்தியாவின் ஏற்றுமதி 100 பில்லியன் டாலரை தொடுவது இதுவே முதல்முறை.

இந்த காலாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 101.80 மில்லியன் அமெரிக்க டாலர் என வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 33.44 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் ஆகஸ்டு மாதத்தில் 33.28 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 35.17 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் ஏற்றுமதி இலக்கு 400 பில்லியன் அமெரிக்க டாலராக இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதத்தில் அதாவது ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இந்தியாவின் ஏற்றுமதி 197 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

Also Read: ஏலத்தில் டாடா வெற்றி.. 68 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உரிமையாளரிடமே சென்ற ஏர் இந்தியா நிறுவனம்..?

இதுவே முந்தைய நிதியாண்டில் முதல் ஆறு மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 125.61 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. ஆனால் இதே ஆறு மாதத்தில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இந்தியாவின் இறக்குமதி 275.92 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. வர்த்தக பற்றாக்குறை 79 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

Also Read: நர்மதா ஆற்றின் குறுக்கே 32 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட இந்தியாவின் முதல் 8 வழிப்பாலம்..

இந்தியா அதிக அளவில் ஏற்றமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து UAE, சீனா, சிங்கப்பூர், நெதர்லாந்து, ஹாங்காங், பெல்ஜியம், இத்தாலி, ஜெர்மனி, சவுதி அரேபியா, இந்தோனேசியா, பிரேசில், நேபாள், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தாய்லாந்து, நைஜீரியா, ஸ்பெயின் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் உள்ளன.

Also Read: உலகிலேயே அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்து புதிய சாதனை படைத்த இந்தியா..

Leave a Reply

Your email address will not be published.