இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை AMCA போர் விமானத்திற்கு விரைவில் ஒப்புதல்..?

இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை உள்நாட்டு போர் விமானத்தை உருவாக்குவதற்கான திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவை குழு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என கூறப்படுகிறது.

இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமாக AMCA-வின் வடிவமைப்பு மற்றும் முன்மாதிரி மேம்பாட்டிற்கான பாதுகாப்பு அமைச்சரவை குழுவின் (CCS) ஒப்புதலை பெறுவதற்கான செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

இன்று மாநிலங்களவையில் சாந்தா சேத்ரி எழுத்து பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பட் பதிலளித்துள்ளார். ஐந்தாம் தலைமுறை போர் விமானம் அதன் முந்தைய விமானங்களை விட விலை அதிகம் என பாதுகாப்பு அமைச்சகம் தனது பதிலில் கூறியுள்ளது.

Also Read: 800 கிலோமிட்டர் இலக்கை தாக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ள பிரம்மோஸ் ஏவுகணை..?

மேலும் ஐந்தாம் தலைமுறை AMCA போர் விமானம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதால் அதே போன்ற மற்ற ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை விட விலை குறைவாகவே இருக்கும் என மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை தற்போது பயன்படுத்தி வரும் ரபேல் போர் விமானமானது 4.5 ஆம் தலைமுறை போர் விமானம் ஆகும். அதேநேரம் சீனா பயன்படுத்தி வரும் செங்டு ஜே20 ஐந்தாம் தலைமுறை போர் விமானம் என கூறப்படுகிறது. பாகிஸ்தான் ஏற்கனவே சீனாவின் ஜே10 போர் விமானத்தை பயன்படுத்தி வரும் நிலையில் ஜே20 போர் விமானத்தையும் வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Also Read: சீனாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன போர் விமானத்தை படையில் இணைத்த பாகிஸ்தான்..?

AMCA திட்டத்தை இறுதி செய்ய CCS ஓப்புதல் முக்கியமானது. CCS ஒப்புதல் கிடைத்துவிட்டால் முதல் முன்மாதிரி போர் விமானம் 2025 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற அனைத்து சோதனைகளும் முடிந்த பிறகு 2030 ஆம் ஆண்டு உற்பத்தி தொடங்கப்பட்டு 2035 ஆம் ஆண்டு விமானம் பயன்பாட்டிற்கு வரலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவின் ஜாகுவார் மற்றும் மிராஜ் 2000 போர் விமானங்களுக்கு மாற்றாக இந்தியா AMCA போர் விமானத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது. AMCA ஆனது வான் ஆதிக்கம், தரை தாக்குதல், எதிரியின் வான் பாதுகாப்பு அடக்குமுறை மற்றும் மின்னனு போர் தாக்குதல்களை நடத்தும் ஒரு மல்டிரோல் போர் விமானமாகும்.

Leave a Reply

Your email address will not be published.