இந்தியாவின் முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை 5 ஆண்டுக்குள் தயாராகிவிடும்: பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்

அடுத்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் இந்தியா தனது முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வைத்திருக்கும் என பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 75 வருட சுதந்திரத்துடன் இணைந்து பிரம்மோஸ் ஏரோஸ்பேஸின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு நிகழ்ச்சியில் பேசிய பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அதுல் ரானே, பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் திறன் கொண்டது என தெரிவித்துள்ளார்.

அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் பிரம்மோஸ் மூலம் எங்களின் முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை நாங்கள் பெற முடியும் என கூறியுள்ளார். உலகின் சிறந்த, அதிவேகமான மற்றும் மிகவும் சக்திவாய்ந்த, நவீன, துல்லியமான மற்றும் வெல்ல முடியாத பிரம்மோஸின் முதல் சூப்பர்சோனிக் வெளியீட்டின் 21 ஆம் ஆண்டை குறிக்கும் வகையில், ஜூன் 12 தொடங்கி பிரம்மோஸ் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12 அன்று பிரம்மோஸ் ரைசிங் தினத்தில் முடிவடைய உள்ளன.

வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு அதன் ஒரு பகுதியாக, நிறுவனம் தனது கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியில் நியாயமான பங்கை இந்தியா முழுவதும் பெண்கள் அதிகாரமளித்தல் தொடர்பான திட்டங்கள் மற்றும் அது தொடர்பாக செலவிட உள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தியை துவக்க உத்திரபிரதேசத்தின் லக்னோவில் சுமார் 80 ஹெடேர் நிலத்தை 300 கோடி ஆரம்ப முதலீட்டில் பெற்றுள்ளது. இந்த ஆலையில் 2023 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 80 முதல் 100 பிரம்மோஸ் ஏவுகணையை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பிரம்மோஸ்-NG ஏவுகணைக்கான பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.

Also Read: சீன எல்லையில் பணியில் இருந்த 2 இராணுவ வீரர்களை 14 நாட்களாக காணவில்லை..

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையானது 2005 ஆம் ஆண்டு இந்திய கடற்படையிலும், 2007 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்திலும், 2020 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரம்மோஸ் ஏவுகணை உள்நாடு மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Also Read: இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்கு 3000 கோடி மதிப்பில் அஸ்திரா ஏவுகணை.. ஒப்பந்தம் கையெழுத்தானது..

ஜனவரி 28 அன்று பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம், பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு கடற்கரை அடிப்படையிலான கப்பல் எதிர்ப்பு பிரம்மோஸ் அமைப்பை வழங்குவதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பிலிப்பைன்ஸ் தவிர வியட்நாம், மலேசியா போன்ற நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த பல மில்லியன் டாலர் மதிப்புள்ள பிரம்மோஸ் ஏற்றுமதி ஒப்பந்தம், இந்தியாவை இராணுவ தளவாட ஏற்றுமதியாளராக மாற்றியுள்ளது.

Also Read: இந்திய விமானப்படைக்கு புதிதாக 6 எரிபொருள் நிரப்பும் விமானங்களை வாங்க உள்ள IAF..

Leave a Reply

Your email address will not be published.