சோதனைக்கு தயாராகும் இந்தியாவின் புதிய தேஜஸ் MK-2 போர் விமானம்..

இந்தியாவின் தேஜஸ் விமானத்தின் மேம்பட்ட வடிவமான தேஜஸ் MK-2 போர்விமானம் சோதனைக்கு தயாராக உள்ளது. சோதனை வெற்றிகரமாக முடிந்தால் மிராஜ்-2000, மிக்-29 மற்றும் ஜாகுவார் போர் விமானங்களுக்கு மாற்றாக அமையும் என கூறப்படுகிறது.

புதிய தேஜஸ் MK-2 போர் விமானம் இந்தியாவின் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி மற்றும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஒற்றை எஞ்சின் கொண்ட போர் விமானம் ஆகும். தேஜஸ் MK-2 உலகின் முன்னணி நான்கு இலகுரக போர் விமானங்களில் ஒன்றாகும்.

ஸ்வீடன் நாட்டின் JAS-39 Gripen போர் விமானம், பாகிஸ்தான் மற்றும் சீனா இணைந்து உருவாக்கிய JF-17 மற்றும் சீனா உருவாக்கிய J-10 ஆகியவை உலகின் முன்னணி போர் விமானங்கள் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் தேஜஸ் மற்றும் ஸ்வீடனின் JAS-39 போர் விமானங்கள் ஒரே மாதிரியான செயல்திறன் கொண்டவை.

ஆனால் சீனாவின் JF-17 மற்றும் J-10 விமானங்களை விட தேஜஸ் MK-2 மேம்பட்ட விமானம் என கூறப்படுகிறது. தேஜஸ் MK-2 போர் விமானம் 6.5 டன்களுக்கும் அதிகமான பேலோடுகளை எடுத்து செல்லக்கூடியது. 2022ல் சோதனை செய்யப்பட்டு 2023ல் முதல் போர் விமானம் தயாராகும். 2026ல் தேஜஸ் MK-2 போர் விமானம் இந்திய விமானப்படையில் இணைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Also Read: கடற்படை வலிமையை அதிகரித்து வரும் சீனா.. மூன்றாவது விமானந்தாங்கி கப்பலுக்கு அனுமதி அளிக்குமா பாதுகாப்பு அமைச்சகம்..?

இந்த போர் விமானத்தில் AESA ரேடார், காக்பிட் கண்ணாடி ஆகியவை பொருத்தப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தேஜஸ் விமானத்தின் நீளம் 14.60 மீட்டர், இறக்கைகள் 8.50 மீட்டர், 4.86 மீட்டர். மொத்த எடை 11,300 கிலோகிராம், புறப்படும் எடை 17,500 கிலோகிராம், எரிபொருள் 3,400 கிலோகிராம், பேலோடு 6,500 கிலோ ஆகும்.

Also Read: பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் வல்லமை இந்தியாவிற்கும் உண்டு என்பதை உலகிற்கு காட்டியுள்ளோம்: ராஜ்நாத்சிங்

அதிகபட்ச வேகம் மணிக்கு 2,385 கிலோ மீட்டர். Gsh-30-1 துப்பாக்கி, வானில் இருந்து வான் இலக்கை தாக்கும் NG-CCM, அஸ்திரா, மெட்டேடர், ஆஸ்ரம், MICA ஆகிய ஏவுகணைகள் உள்ளன. வான்வழி ஏவுகணையான பிரமோஸ்-NG, நிர்பய், SCALP EG மற்றும் ருத்ரம் கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை உட்பட பல லேசர் ஏவுகணைகளும் உள்ளன.

Also Read: பாகிஸ்தானுக்கு அதிநவீன போர்கப்பல் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வழங்கியுள்ள சீனா..

Leave a Reply

Your email address will not be published.