போட்டியில் இந்தியாவின் தேஜஸ்.. தேஜஸ் போர் விமானத்தை வீழ்த்த சீனா போட்ட திட்டம்..

மலேசியாவின் ராயல் விமானப்படை 36 போர் விமானங்களை வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இலகு ரக விமானங்களை வாங்குவதற்கான டெண்டரை இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியிட்ட நிலையில் பல்வேறு நாடுகள் தங்களது போர் விமானம் பற்றிய அறிக்கைகளை சமர்பித்துள்ளன.

இந்த போட்டியில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானம், இத்தாலியின் M-346FA தாக்குதல் விமானம், தென்கொரியாவின் FA-50 இலகுரக தாக்குதல் விமானம், ரஷ்யாவின் Yak-130 போர் பயிற்சி விமானம், சீனாவின் JF-17 போர் விமானங்கள் ஆகியவை தனது விமானங்களை விற்க மலேசிய விமானப்படையின் டெண்டரில் கலந்து கொண்டுள்ளன.

இதில் பாகிஸ்தான் கலந்து கொள்ளவில்லை. ராயல் மலேசிய விமானப்படை விதித்திருந்த அனைத்து நிபந்தனைகளையும் தேஜஸ் நிறைவேற்றியுள்ளது. தேஜஸ் MK1 போர் விமானத்திற்கு 41.5 மில்லியன் டாலர் மற்றும் தேஜஸ் 5G போர் விமானத்திற்கு 37.6 மில்லியன் டாலர் என HAL விலை நிர்ணயிதுள்ளது.

இந்நிலையில் தேஜஸ் விமானத்தை மலேசியா வாங்கி விட்டால், அது தனது விமான விற்பனைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என சீனா நினைக்கிறது. இதனால் சீனா உற்பத்தி விலையில் இருந்து 30 சதவீதம் விலை குறைப்பு செய்வதாக மலேசிய விமானப்படையிடம் ரகசியமாக தெரிவித்துள்ளது.

Also Read: இந்தியாவின் தேஜஸ் போர் விமானத்தில் ஹம்மர் ஏவுகணை.. சீன எல்லையில் நிலைநிறுத்த முடிவு..

இருப்பினும் மலேசிய விமானப்படை JF17 போர் விமானத்தை வாங்குமா என தெரியாது. ஏனெனில் JF-17 விமானத்தில் உள்ளது மிகவும் பழைய டெக்னாலஜி. மேலும் இதுவரை JF-17 விமானம் நான்கு முறை விபத்தை சந்தித்து உள்ளது. தற்போது இந்தியாவின் தேஜஸ், சீனாவின் JF-17 மற்றும் தென்கொரியாவின் FA-50 மட்டுமே போட்டியில் உள்ளன.

Also Read: சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதிகளை உடனே காலி செய்யுங்கள்.. பாகிஸ்தானுக்கு இந்திய தூதர் பதிலடி..

சீனா உற்பத்தி விலையில் 30 சதவீதம் குறைத்து குடுப்பதால் அந்நாட்டிற்கு நஷ்டம் என்றாலும் தேஜஸ் போர் விமானத்தை மலேசியா வாங்க கூடாது என்பதற்காக பல்வேறு குறுக்கு வழிகளில் தேஜஸ் விற்பனை ஆவதை தடுத்து வருகிறது. ஆனால் தேஜஸ் விமானம் சீன விமானம் போல் அல்ல. நவீன தொழிற்நுட்பத்துடன் உள்ளது. தேஜஸ் விமானத்தில் பிரமோஸ் ஏவுகணை பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ராயல் மலேசிய விமானப்படை இந்திய தேஜஸ் விமானத்தை வாங்கவே வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

Also Read: விண்வெளியில் சாட்டிலைட்டை தாக்கி அழித்த ரஷ்யா.. அமெரிக்கா எச்சரிக்கை..

Leave a Reply

Your email address will not be published.