இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாற உள்ளதாக இந்தோனேசிய முதல் ஜனாதிபதியின் மகள் அறிவிப்பு..

இந்தோனேசியாவின் முதல் ஜனாதிபதியான சுகர்னோவின் மகள் சுக்மாவதி சுகர்ணோபுத்ரி இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாற உள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் அவரது குடும்பத்தின் பூர்வீக நிலமான பாலியின் சிங்கராஜா நகரில் உள்ள புலேலெங் ரீஜென்சியில் உள்ள பாலி அகுங் சிங்கராஜா என இடத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுக்மாவதி சுகர்ணோபுத்ரி(70) இந்தோனேசியாவின் முதல் ஜனாதிபதி சுகர்னோ மற்றும் அவரது மூன்றாவது மனைவி பத்மாவதியின் மகள் ஆவார். மேலும் இந்தோனேசியாவின் ஐந்தாவது ஜனாதிபதியான மெகாவதி சோகர்னோபுத்ரியின் சகோதரியும் ஆவார். சுக்மாவதியின் பாட்டி இந்து மதத்தை சேர்ந்தவர்.

இந்த மதம் மாற்றத்திற்கு அவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒத்துகொண்டதாக கூறப்பட்டுள்ளது. சுக்மாவதி இந்தோனேசிய தேசிய கட்சியின் நிறுவனர் ஆவார். அக்டோபர் 26 ஆம் தேதி பாலியில் நடைபெறும் “சுதி வதனி”யில் அவர் இந்து மதத்திற்கு மாற உள்ளார்.

சுக்மாவதி இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் இலக்காக இருந்து வருகிறார். சுக்மாவதி பேஷன் துறையில் பட்டம் பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் பேஷன் வீக்கில் ஒரு கவிதை எழுதினார். அந்த கவிதை இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக சுக்மாவதியை கண்டித்து போராட்டம் வெடித்தது.

அவர் அந்த கவிதையில் இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தாவை விட இந்தோனேசிய பாரம்பரிய உடை மிகவும் அழகாக உள்ளது என கூறி பரிந்துரைத்தார். இதனால் சுக்மாவதி இஸ்லாத்தை அவமதித்து விட்டதாகவும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் முஸ்லீம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

மேலும் அவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர். இதனால் சுக்மாவதி மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால் செய்தியாளர்கள் சந்திப்பில், என் கவிதையால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களிடம் என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து மன்னிப்பு கோருகிறேன் என கண்களில் கண்ணீருடன் மன்னிப்பு கேட்டார். இருப்பினும் இதனை ஏற்றுகொள்ளாத ஒரு சில அமைப்புகள் அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Also Read: இஸ்லாம் எங்களின் மாநில மதம் கிடையாது.. பங்களாதேஷ் மதசார்பற்ற நாடு: முராத் ஹசைன்

இந்த நிலையில் தான் அவர் இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாற உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் சுக்மாவதிக்கு இந்து மதத்தை பற்றிய விரிவான தெளிவு இருப்பதாகவும், அவர் இந்து மதத்தின் கோட்பாடுகள் மற்றும் சடங்குகளை பற்றி தெரிந்துருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தியா, நேபாளம், பங்களாதேஷிற்கு பிறகு இந்துக்கள் அதிகம் வசிக்கும் நாடு இந்தோனேசியா ஆகும். மேலும் உலகிலேயே அதிக இஸ்லாமியர்களை கொண்ட நாடு இந்தோனேசியா. இந்தோனேசியாவின் பாலியில் தான் அதிகமாக இந்துக்கள் வாழ்கிறார்கள். இந்தோனேசியாவின் ஆறு உத்யோகபூர்வ மதங்களில் இந்து மதமும் ஒன்று.

Also Read: சென்னை அருகே ஐம்பொன் சிலைகள் விற்பனை.. மடக்கி பிடித்த சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு..

இதேபோல் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜாவா இளவரசி காஞ்செங் மகேந்திரனி பாலியில் நடைபெற்ற “சுதி வதனி” மூலம் இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார். இந்தோனேசியாவில் 2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 40 லட்சம் இந்துக்கள் வாழ்கிறார்கள். அவற்றில் 85 சதவீதம் பேர் பாலி மகாணத்தில் வாழ்கிறார்கள்.

Also Read: ஷியா முஸ்லிம்கள் எங்கு இருந்தாலும் குறி வைக்கப்படுவீர்கள்: ஐஎஸ் அமைப்பு எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published.