கோவா விடுதலை நாளில் தனது முதல் கடல் சோதனையை தொடங்கிய INS மோர்முகாவோ போர்கப்பல்..

இந்தியாவின் இரண்டாவது விசாகப்பட்டினம் அல்லது P15B வகுப்பை சேர்ந்த ஸ்டெல்த் வழிகாட்டி ஏவுகணை அழிப்பான் கப்பலான INS மோர்முகாவோ தனது முதல் கடல் சோதனையை நேற்று தொடங்கியது. அடுத்த ஆண்டு மத்தியில் INS மோர்முகாவோ இந்திய கடற்படையில் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 19 ஆம் தேதியான நேற்று கோவா மாநிலத்தின் 60 ஆம் ஆண்டு விடுதலை நாள் கொண்டாடப்பட்டது. 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்தாலும், 1961 ஆம் ஆண்டு வரை கோவா மாநிலம் போர்த்துகீசியரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கு விடுதலை போராட்டம் தீவிரம் அடையவே 1961 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் அதிரடியாக கோவாவிற்குள் நுழைந்து டிசம்பர் 19 அன்று மாநிலத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

அந்த நாளை வருடந்தோறும் கோவா விடுதலை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று நடந்த கோவா விடுதலை தினத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். பின்னர் விசாகப்பட்டினம் வகுப்பை சேர்ந்த இரண்டாவது கப்பலான INS மோர்முகாவோ தனது முதல் கடல் சோதனை பயணத்தை தொடங்கியது. இதனை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

இந்த விசாகப்பட்டினம் வகை கப்பல்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே கட்டப்படுகின்றன. மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் கப்பலை கட்டி வருகிறது. மொத்தம் நான்கு கப்பல்கள் கட்டப்படுகின்றன. இந்த வகுப்பின் முதலாவது கப்பல் INS விசாகப்பட்டினம் நவம்பர் 21, 2021 அன்று இயக்கப்பட்டது. இரண்டாவது கப்பலான INS மோர்முகாவோ செப்டம்பர் 17, 2016 ஆம் ஆண்டு கட்டுமானப்பணி தொடங்கப்பட்டது.

Also Read: ஹைப்பர்சோனிக் ஏவுகணையை விரைவாக உருவாக்க வேண்டும்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

தற்போது கட்டிமுடிக்கப்பட்டு தனது முதல் கடல் சோதனையை நேற்று தொடங்கி உள்ளது. இந்த போர்கப்பல் உலகெங்கிலும் உள்ள தொழிற்நுட்ப ரீதியில் மேம்பட்ட வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான்களில் ஒன்றாகும். 7,400 டன் எடையும், 163 மீட்டர் நீளம் மற்றும் மணிக்கு 56 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. 50 அதிகாரிகள் மற்றும் 250 மாலுமிகள் உள்ளனர்.

Also Read: பிரமோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையின் வான் பதிப்பை வெற்றிகரமாக சோதனை செய்தது DRDO..

AESA ரேடார் மற்றும் போர் மேலாண்மை அமைப்பு உட்பட மேம்பட்ட தொழிற்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எலக்ட்ரானிக் போர் தொடர்பான சாதனங்கள் மற்றும் விமான எதிர்ப்பு, கப்பல் எதிர்ப்பு, தரை தாக்குதல் ஏவுகணைகள் உள்ளன. கடற்படை துப்பாக்கிகள், நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் லாஞ்சர்கள், டார்பிடோ லாஞ்சர்கள் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்கள் நிறுத்தும் வசதியும் உண்டு. கோவாவின் துறைமுக நகரமான மோர்முகாவோ பெயரையே இந்த INS போர் கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது. மற்ற இரண்டு போர்கப்பல்களான INS இம்பால் மற்றும் சூரத் ஆகியவை 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு கடற்படையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Also Read: நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் SMART அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..

Leave a Reply

Your email address will not be published.