சர்வதேச அணுசக்தி அமைப்பு தேர்தல்.. ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா வெற்றி..

சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) 65வது கூட்டம் ஆஸ்திரியாவின் வியன்னாவில் செப்டம்பர் 20 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 80க்கும் மேற்பட்ட தலைப்புகளில் அணுசக்தி பற்றிய நிகழ்ச்சிகளை IAEA நடத்தியது.

சர்வதேச அணுசக்தி அமைப்பின் வெளிப்புற தணிக்கையாளராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அணுசக்தி சப்ளையர்கள் குழுவில் (NSG) நிரந்தர உறுப்பினராக இந்தியா முயற்சித்து வரும் நிலையில் இந்த வெற்றி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

IAEA என்பது அணுசக்தி துறையில் தொழிற்நுட்பத்தின் பாதுகாப்பான மற்றும் அமைதியான பயன்பாட்டை ஊக்குவிக்கும் அமைப்பாகும். இந்தியா வெற்றி பெற்றுள்ளதால் 2022 முதல் 2027 வரை அந்த பொறுப்பில் ஆறு ஆண்டுகளுக்கு இருக்கும். இந்த பதவிக்கு பல நாடுகள் போட்டியிட்ட நிலையில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தலின் முதலாவது சுற்றில் ஜெர்மனி 36 வாக்குகளையும், இந்தியா 30, எகிப்து 20, ரஷ்யா 11, துருக்கி 9, பிலிப்பைன்ஸ் 7, தென் கொரியா 2 வாக்குகள் பெற்றன. இரண்டாவது சுற்றில் ஜெர்மனி மற்றும் இந்தியாவிற்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதில் ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

Also Read: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆதரவு..

IAEA அமைப்பின் வெளிப்புற தணிக்கையாளராக இந்தியாவின் கட்டுப்பாட்டாளர் மற்றும் தணிக்கையாளரான ஜெனரல் ஜி சி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முர்மு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் துணைநிலை ஆளுநராக பணியாற்றியவர் ஆவார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்தியாவின் கட்டுப்பாட்டாளர் மற்றும் தணிக்கையாளராக நியமிக்கப்பட்டார்.

Also Read: அணுசக்தி திறன் கொண்ட அக்னி-5 ஏவுகணையை சோதனை செய்ய உள்ள DRDO.. ஆவேசமடைந்த சீனா, பாகிஸ்தான்..

மேலும் முர்மு செலவுத்துறை செயலாளர், நிதி சேவைகள், வருவாய் துறை போன்ற பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார். தற்போது IAEA அமைப்பின் வெளிப்புற தணிக்கையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Also Read: இந்திய இராணுவத்திற்கு புதிதாக 118 அர்ஜூன் டேங்குகள்.. அனுமதி வழங்கியது பாதுகாப்பு அமைச்சகம்..

Leave a Reply

Your email address will not be published.