சர்ச்சைக்கு மத்தியில் பிரதமர் மோடியை சந்தித்தார் ஈரான் வெளியுறவு அமைச்சர்..

இந்தியா வந்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அப்தல்லாஹியன் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பின்னர் முகமது நபி பற்றிய கருத்துக்களுக்கு காரணமாணவர்களை இந்திய அரசாங்கம் கையாண்டதில் ஈரான் திருப்தி அடைந்துள்ளதாக ஹொசைன் அப்தல்லாஹியன் தெரிவித்துள்ளார்.

முகமது நபி தொடர்பான கருத்துக்கு இந்திய தூதரை வரவழைத்து ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தனது எதிர்ப்பை தெரிவித்தது இந்த நிலையில், கடந்த ஆண்டு பதவியேற்ற நிலையில் முதன்முறையாக இந்தியா வந்த ஹொசைன் அப்தல்லாஹியன் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் பிரதமர் மோடியை ஹொசைன் அப்தல்லாஹியன் நேற்று நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஹொசைன் அப்தல்லாஹியனை வரவேற்ற பிரதமர் மோடி, இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான நீண்டகால நாகரிக மற்றும் கலாச்சார தொடர்புகளை நினைவு கூர்ந்தார். கோவிட்க்கு பிந்தைய காலகட்டத்தில் பரினாற்றங்களை விரைவுபடுத்த இரு நாடுகளும் செயல்பட வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி ஈரான் வெளியுறவு அமைச்சரிடம் தனது வாழ்த்துக்களை ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். மேலும் ஈரான் அதிபரை விரைவில் சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, இந்தியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான நாகரீக தொடர்புகளை மேலும் மேம்படுத்துவது குறித்த பயனுள்ள விவாதத்திற்கு வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அப்தல்லாஹியனை வரவேற்பதில் மகிழ்ச்சி நமது உறவுகள் இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பயனளித்து பிராந்திய பாதுகாப்பு மற்றும் செழுமையை மேம்படுத்தியுள்ளன என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Also Read: முகமது நபி சர்ச்சை: நுபுர் சர்மாவிற்கு ஆதரவு தெரிவித்த நெதர்லாந்து பாராளுமன்ற தலைவர்..

சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) ஜூன் 10 ஆம் தேதி வியன்னாவில் கூடுகிறது. அங்கு ஈரானின் அணுசக்தி பதிவு குறித்து விவாதிக்கப்படுகிறது. கடந்த வாரம் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸ் பிரதமர் மோடியை சந்தித்த நிலையில், தற்போது ஈரான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்துள்ளார். விரைவில் இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் இந்தியா வர உள்ளார்.

Also Read: ஜின்ஜியாங்கில் மனித உரிமை மீறல்.. சீனாவை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள்..

Leave a Reply

Your email address will not be published.