ஒலிம்பிக் போட்டியா? அணு ஆயுத போட்டியா? புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய சீனா..

சீனாவில் தற்போது குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் நிலையில் தற்போது ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டி நடைபெற்று வரும் மைதானத்திற்கு பின்னால் இருக்கும் தொழிற்சாலை ஒரு அணு ஆலை என சமூக ஊடகங்களில் பரவி விவாத பொருளாக மாறியுள்ளது.

பெய்ஜிங்கில் உள்ள பிக் ஏர் ஷோகாங் ஒலிம்பிக் தளம் இந்த முறை கவனத்தை ஈர்த்துள்ளது. குளிர்கால ஒலிம்பிக் நடந்து வரும் நிலையில இந்த ஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் அந்த மைதானத்தை சுற்றி எங்குமே பனி இல்லை. அந்த தளத்தில் மட்டுமே பனி உள்ளது.

மேலும் இந்த மைதானத்திற்கு பின்னால் உள்ள தொழிற்சாலை அணு உலை என கூறப்பட்டு அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் அது ஒரு எஃகு ஆலை என கூறப்படுகிறது. இந்த புகைபோக்கி அடுக்குகள் 196 அடி உயரத்துடன் உள்ளது. அதில் ஒலிம்பிக் போட்டியின் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது.

1919 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த ஆலை, அதிக காற்று மாசு ஏற்படுத்தியதால், 2008 கோடைகால ஒலிம்பிக் போட்டிற்கு தாயாராகும் வகையில் மூடப்பட்டது. பெய்ஜிங்கின் காற்று மாசுவிற்கு இந்த ஆலையே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தற்போது இந்த ஆலை சுற்றுலா மற்றும் கலை கண்காட்சிகளுக்கான மையமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த ஆலையில் 2013 ஆம் ஆண்டு ஒரு மின்னணு இசை விழா நடத்தப்பட்டுள்ளது. சீனாதான் உலகின் மிகப்பெரிய பசுமை இல்ல வாயுக்களை வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய உமிழ்வுகளில் கால் பகுதிக்கும் அதிகமாக வாயுக்களை வெளியிட்டு வருகிறது. இது உலக அளவில் காலநிலை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

Also Read: உய்கூர் முஸ்லிம் இனஅழிப்பு.. சீனா செல்கிறது ஐ.நா மனித உரிமைகள் ஆணையம்..

தற்போது இந்த ஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டி டிவியில் ஒலிபரப்பப்பட்ட போது அதனை ஸ்கீரின்ஷாட் எடுத்த பார்வையாளர்கள் அது அணு உலை எனவும், எஃகு தொழிற்சாலை எனவும், அது ஒரு மியூசியம் எனவும் கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் எஃகு ஆலையாக செயல்பட்டு வந்த இந்த தொழிற்சாலை தற்போது கண்காட்சி மையமாக செயல்பட்டு வருகிறது.

Also Read: சீன நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்க எம்.பி.க்களின் சர்வதேச கூட்டணி..

தற்போது இந்த புகைப்படம் மட்டும் சர்ச்சையில் சிக்கவில்லை. 2020 ஆம் ஆண்டு கால்வான் மோதலில் ஈடுபட்ட PLA கமாண்டர் குய் ஃபாபாவோவை ஒலிம்பிக்கிற்கு ஜோதி ஏற்றவைத்து சர்ச்சையில் சிக்கியது. இதனால் இந்தியா இந்த குளிர்கால ஓலிம்பிக்கை ராஜதந்திர ரீதியில் புறக்கணித்து.

இதுதவிர ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கூர் முஸ்லிம்களின் இனப்படுகொலையை கண்டித்து அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணித்தன. மேலும் ஒமிக்ரான் பரவலும் அதிகமாகி வருவதால் ஒரு சில நகரங்களில் சீனா ஊரடங்கை பிறப்பித்துள்ளதும் சர்ச்சையாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.