பெல்ஜியத்திடம் இருந்து 50 வருட பழமையான C-130 விமானத்தை வாங்க உள்ள பாகிஸ்தான்..?

பாகிஸ்தான் விமானப்படை பெல்ஜிய விமானப்படையின் ஓய்வுபெற்ற C-130H போக்குவரத்து விமானத்தை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானம் 50 வருடம் பழமையான விமானம் ஆகும்.

16 போக்குவரத்து விமானங்களை கொண்ட பாகிஸ்தான் விமானப்படை அதன் கடற்படையை மேம்படுத்த கூடுதலாக C-130 விமானங்களை வாங்க உள்ளதாக கடந்த ஆண்டு தெரிவித்து இருந்தது. 2019 ஆம் ஆண்டு பெல்ஜிய விமானப்படையுடன் C-130 விமானங்களுக்கான ஒப்பந்தம் தொடங்கப்பட்டு 2021 ல் முடிவடைந்தது.

பெல்ஜியம் விமானப்படையில் இருந்து அனைத்து C-130 விமானங்களும் 2021 ஆம் ஆண்டுடன் ஓய்வு பெற்றுவிட்டன. அந்த விமானங்களை பாகிஸ்தான் வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. பெல்ஜியம் விமானப்படையில் 13 C-130 விமானம் இருக்கும் நிலையில் பாகிஸ்தான் எத்தனை விமானங்களை வாங்க உள்ளது என்ற விபரம் வெளியாகவில்லை.

அவற்றில் பறக்கும் நிலையில் உள்ள அனைத்து விமானங்களையும் பாகிஸ்தான் வாங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர மேலும் மற்றொரு ஐரோப்பிய நாட்டிடம் இருந்து 7 முதல் 8 C-130 விமானங்களை வாங்க பாகிஸ்தான் விமானப்படை ஆராய்ந்து வருகிறது. இந்த C-130 விமானம் 1973ல் பெல்ஜியம் விமானப்படையில் இணைக்கப்பட்டது மற்றும் 2021 ல் அனைத்து விமானங்களும் ஓய்வு பெற்றுவிட்டன.

தற்போது கடற்படை வலிமையை அதிகரிக்க பாகிஸ்தான் இந்த 49-50 வருட பழமையான போக்குவரத்து விமானத்தை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த C-130 விமானம் 42,000 பவுண்டுகள் சுமந்து செல்லக்கூடியவை மற்றும் 3,800 கிமீ தூரம் பயணிக்க கூடியது. 92 பயணிகள் அல்லது 62 பாராட்ரூப்பர்கள் மற்றும் பீரங்கி அல்லது கவச வாகனங்களை தொலைதூர விமான நிலையங்களுக்கு கொண்டு செல்ல முடியும்.

Also Read: உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிநவீன விமானந்தாங்கி கப்பலை கடலில் இறக்கிய சீனா..

பாகிஸ்தான் விமானப்படை 1962 முதல் இந்த அமெரிக்க தயாரிப்பான லாக்ஹீட் மார்ட்டின் C-130 ஹெர்குலஸ் விமானத்தை பயன்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் ஏரோநாட்டிக்கல் வளாகம் C-130 பராமரிப்பு மற்றும் எஞ்சின் மறுசீரமைப்பு உள்கட்டமைப்பு மற்றும் நிபுணத்துவத்தை கொண்டுள்ளது.

Also Read: இந்தியாவின் முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை 5 ஆண்டுக்குள் தயாராகிவிடும்: பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்

Leave a Reply

Your email address will not be published.