சீனாவின் உதவியுடன் பாலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கி வரும் சவுதி அரேபியா..?

அமெரிக்காவின் உளவுத்துறையின் அறிக்கையின் படி, சவுதி அரேபியா சீனாவின் உதவியுடன் தொழிற்நுட்ப பரிமாற்றத்தின் மூலம் தனது சொந்த ஏவுகணை ஒன்றை உருவாக்கி வருவதாக கூறியுள்ளது. சவுதி அரேபியாவின் இந்த முடிவு மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தலாம் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

CNN வெளியிட்டுள்ள செய்தியில், சவுதி அரேபியா கடந்த காலங்களில் சீனாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்கியுள்ளது. ஆனால் இதுவரை சவுதி அரேபியா சொந்தமாக ஏவுகணையை உருவாக்கவில்லை. ஆனால் தற்போது சீன தொழிற்நுட்பத்துடன் சவுதி அரேபியா பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை உருவாக்கி வருகிறது.

சாட்டிலைட் மூலம் எடுக்கப்பட்ட் செயற்கைகோள் புகைப்படம் மூலம் சவுதி அரேபியா ஏவுகணை தயாரித்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்படுகிறது. இது குறித்து வெள்ளை மாளிகையில் உள்ள அதிகாரிகளுக்கு விளக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ஈரானுடன் அணுசக்தி ஏவுகணை தயாரிக்கும் முடிவை கைவிடும் படி கூறி வரும் நிலையில் சவுதி அரேபியாவின் இந்த முடிவு அமெரிக்காவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா தற்போது தலைநகர் ரியாத்தில் இருந்து 200 மைல் தொலைவில் உள்ள டவாத்மி நகருக்கு அருகில் ஏவுகணை தயாரித்து வருவதாக செயற்கைகோள் படங்கள் காட்டுகின்றன. சவுதி அரேபியாவும் ஈரானும் எதிரி நாடுகள், ஈரான் அமெரிக்காவின் தடைகளையும் மீறி ஏவுகணைகளை தயாரித்து வரும் நிலையில் சவுதி அரேபியாவும் தற்போது சொந்தமாக ஏவுகணை தயாரித்து வருகிறது.

Also Read: தைவான் அருகே சீன நீர்மூழ்கி கப்பலை தாக்கிய அமெரிக்கா.. தென்சீனக்கடலில் பரபரப்பு..

மிடில்பரி இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர்நேஷ்னல் ஸ்டடீஸின் ஆயுத நிபுணரும் பேராசிரியருமான ஜெஃப்ரி லூயிஸ் கூறுகையில், ஈரானின் பெரிய ஏவுகணை திட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவு கவனம் செலுத்தப்படும் அளவுக்கு சவுதி அரேபியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாரிப்பு திட்டத்தில் கவனம் செலுத்தவில்லை என கூறினார். இருப்பினும் அந்த ஏவுகணை குறித்து வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை.

Also Read: சீன உயிரி தொழிற்நுட்பம் மற்றும் கண்காணிப்பு நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை.. முற்றும் மோதல்..

சீனாவுடன் ஏற்கனவே மோதல் நிலவி வரும் நிலையில் இது அமெரிக்காவுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. சீனா மற்றும் சவுதி அரேபியா இடையிலான ஏவுகணை தயாரிப்பு குறித்து சீனாவிடம் கேட்கப்பட்டபோது, இரு நாடுகளும் மூலோபாய பங்காளிகள், எல்லா துறைகளிலும் நட்பு ரீதியிலான ஒத்துழைப்பை பேணி வருகின்றன. அத்தகைய ஒத்துழைப்பு எந்த சர்வதேச சட்டத்தையும் மீறாது மற்றும் பேரழிவு ஆயுதங்களின் பெருக்கத்தில் ஈடுபடாது என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

Also Read: சீன ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது..? பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அலினா சான் தகவல்..

Leave a Reply

Your email address will not be published.