இஸ்லாம் அரசு மதம் கிடையாது.. புதிய மசோதாவை தாக்கல் செய்த துனிசிய ஜனாதிபதி..?

துனிசியாவில் ஜூலை 25 அன்று புதிய அரசியலமைப்பு வரைவு தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், இஸ்லாத்தை ‘அரசின் மதம்’ என்று குறிப்பிட படாது என துனிசிய ஜனாதிபதி கைஸ் சையத் செவ்வாய் அன்று தெரிவித்துள்ளார்.

துனிசியாவின் ஜனாதிபதி கைஸ் சையத், புதிய குடியரசை கட்டியெழுப்புவதற்காக நாட்டின் சட்ட, அரசியல் மற்றும் பொருளாதார கட்டமைப்புகளை மறுபரிசீலனை செய்து, புதிய அரசியலமைப்பு தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளார். அதில் துனிசியாவின் அடுத்த அரசியலமைப்பு இஸ்லாத்தை மதமாக கொண்ட ஒரு மாநிலத்தை குறிப்பிடாது.

மாறாக, இஸ்லாத்தை மதமாக கொண்ட ஒரு சமூகத்துக்கு சொந்தமானது என குறிப்பிடப்படும் என துனிஸ் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஜனாதிபதி கூறினார். வட ஆப்ரிக்க நாடான துனிசியா முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு. இதுவரை அதன் அரசியலமைப்பு இஸ்லாத்தை அரசு மதமாக ஏற்று கொண்டுள்ளது.

ஜனாதிபதி சையத், 2019 ஆம் ஆண்டு சுயேட்சையாக போட்டியிட்டு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஜூலை 2021ல் நாடாளுமன்றத்தை கலைத்து முழு அதிகாரத்தையும் பெற்றார். புதிய ஆவணத்தின் மீதான வாக்கெடுப்பு ஜூலை 25 அன்று நடைபெற உள்ளது. இது துனிசியாவின் அரசியல் அமைப்பை வடிவமைப்பதில் சையத்திற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குகிறது. மேலும் 2014 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

வரைவு குழுவின் தலைவரான துனிஸ் சட்ட பள்ளியின் முன்னாள் டீன் சடோக் பெலெய்ட், நாட்டின் புதிய அரசியலமைப்பில் இஸ்லாம் பற்றி குறிப்பு இருக்காது. 80 சதவீத துனிசியர்கள் இஸ்லாமிய அரசியலை எதிர்ப்பதாகவும், அனைத்து வகையான தீவிரவாதத்திற்கும் எதிரானவர்கள் எனவும் கூறியிருந்தார்.

இதற்கு முன் 1959 மற்றும் 2014 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இரண்டு அரசியலமைப்புகளும் இஸ்லாம் அரசின் மதம் என கூறுகின்றன. இந்த முறை புதிய அரசியலமைப்பில் இஸ்லாம் பற்றிய குறிப்பு நீக்கப்பட்டுள்ளது. 1959 மற்றும் 2014 ஆம் ஆண்டை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக அரசியலமைப்பு திருத்தப்பட உள்ளது. துனிசியா இஸ்லாமிய நாடாக இருந்தாலும் அது ஷரிய சட்டத்தை பின்பற்றவில்லை, மாறாக ஐரோப்பிய சிவில் சட்டத்தை பின்பற்றுகிறது.

Also Read: பஞ்ச்ஷிரில் தாலிபானின் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய தேசிய எதிர்ப்பு முன்னணி..!

இந்த மாத தொடக்கத்தில், நீதிபதிகள் பயங்கரவாதிகளை பாதுகாப்பதாகவும், ஊழலில் ஈடுபடுவதாகவும் கூறி நாட்டில் உள்ள 57 நீதிபதிகளை ஜனாதிபதி சையத் பதவி நீக்கம் செய்தார். இதனை எதிர்த்து நீதிபதிகள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை மூன்றாவது வாரமாக தொடரும் நிலையில் இந்த புதிய அரசியலமைப்பு வரைவு வந்துள்ளது.

Also Read: இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்கினி உடைக்கு தடை விதித்த பிரான்ஸ் நீதிமன்றம் ..?

சையத்தின் முடிவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான துனிசியர்கள் கடந்த வாரம் போராட்டம் நடத்தியதால் எதிர்கட்சிகள் இந்த வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக கூறியுள்ளனர். புதிய அரசியலமைப்பின் முழு வடிவம் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. துனிசியாவின் அரசியல் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பவும், பொருளாதாரத்தை புத்துயிர் பெறவும் புதிய அரசியலமைப்பு வரைவு வழி வகுக்கும் என சையத் கூறியுள்ளார்.

Also Read: பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான நிதியை 50% குறைத்த பாகிஸ்தான் அரசு..

Leave a Reply

Your email address will not be published.