நீண்ட தூர அச்சுருத்தல்களை கண்காணிக்க MIMDS அமைப்பை சோதனை செய்த இஸ்ரேல்..

இஸ்ரேல் பதுகாப்புத்துறை அதிக உயரத்தில் வட்டமிடவும் மற்றும் நீண்ட தூர அச்சுறுத்தல்களை கண்டறியும் Msssive Inflatable Missile Detection System (MIMDS) என்ற அமைப்பை சோதனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கு பாலஸ்தீன், ஈரான் மற்றும் காசா பயங்கரவாக அமைப்புகளிடம் இருந்து தொடர்ந்து அச்சுருத்தல் இருந்து வருகிறது. இந்த ஆண்டு மே மாதம் காசா பகுதியில் இருந்து ஹமாஸ் இயக்கத்தினர் 1,000க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தினர்.

இஸ்ரேலின் அயர்ன் டோம் அமைப்பு மூலம் 90 சதவீத ஏவுகணைகள் தாக்கி அழிக்கப்பட்டன. இந்த போர் 11 நாட்கள் நடைபெற்றது. தற்போது சோதனை செய்துள்ள MIMDS அமைப்பை இஸ்ரேல் அரசுக்கு சொந்தமான இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் அமெரிக்க TCOM நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது.

Also Read: எதிரிகளின் விமானதளங்களை தாக்கி அளிக்கும் SAAW ஆயுதத்தை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..

காசாவில் உள்ள ஹமாஸ், ஈரான் மற்றும் லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா போராளி குழுவிடம் இருந்து இஸ்ரேலுக்கு தொடர்ந்து அச்சுருத்தல் வந்து கொண்டே இருக்கிறது. ஹமாஸ் உடனான போரின் போது 90 சதவீத ஏவுகணை தாக்குதலை அயர்ன் டோம் உதவியுடன் முறியடித்து இருந்தாலும் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளி குழுக்களுக்கு இடையிலான இந்த தாக்குதலில் 129 பொதுமக்கள் உட்பட 250 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். இஸ்ரேல் தரப்பில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இஸ்ரேலுக்கு வரும் அச்சுறுத்தல்களை கண்காணிக்க இஸ்ரேல் Msssive Inflatable Missile Detection System என்ற அமைப்பை சோதனை செய்து வருகிறது.

Also Read: பங்களாதேஷ் பயங்கரவாதியை மேற்குவங்கத்தில் அதிரடியாக கைது செய்தது NIA..

Leave a Reply

Your email address will not be published.